இந்திய டி20 அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திலக் வர்மா வயிற்றுப் பகுதியில் காயமடைந்து இருப்பதால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட மாட்டார் என செய்திகள் தெரிவிக்கிறது.
தற்போது விஜய் ஹசாரே டிராபியில் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக விளையாடி வந்த திலக் வர்மாவுக்கு வயிற்று பகுதியில் வலி ஏற்பட்டிருக்கிறது. இதற்கான மருத்துவ பரிசோதனைகள் அவர் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
உலகக்கோப்பையில் ஆடுவாரா?
தற்போது திலக் வர்மா இந்திய டி20 அணியின் மிடில் ஆர்டரில் மிக முக்கியமான பேட்ஸ்மேனாக இருக்கிறார். அதேசமயத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் குணமடைவதற்கு நான்கு வாரங்கள் ஆகும் என கூறப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக நியூசிலாந்து டி20 தொடரை அவர் தவற விட்டுவிடுவார் என்று சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடும் பொழுது திலக் வருமா உடல் தகுதியுடன் இருப்பது கடினம் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது இந்திய அணி நிர்வாகத்தின் திட்டங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது.
யாருக்கு வாய்ப்பு?
நியூசிலாந்து டி20 தொடரில் திலக் வர்மா பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகிவிட்டால், அவருடைய இடத்தில் விளையாடுவதற்கு முதல் தேர்வாக ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பார் என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் இஷான் கிஷானையும் அந்த இடத்தில் விளையாட வைக்கலாம்.
இதையும் படிங்க : 4-1.. இங்கிலாந்து அணியை கதற வைத்து வீட்டுக்கு அனுப்பிய ஆஸ்திரேலியா.. 5வது டெஸ்டிலும் அபார வெற்றி
மேலும் பகுதி நேரமாக ஆப் ஸ்பின் வீசக்கூடிய ரியான் பராக் இடம் பெறுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஏற்கனவே 15 பேர் கொண்ட அணியில் ஆப் ஸ்பின் வீசக்கூடிய வாஷிங்டன் சுந்தர் இருப்பதால் 100% இவருக்கான வாய்ப்பு உறுதி என்று சொல்ல முடியாது. தற்போது திலக் வர்மா அறுவை சிகிச்சைக்கு செல்வாரா அல்லது மாற்று மருந்துகளை உட்கொண்டு அறுவை சிகிச்சையை தள்ளிப் போடுவாரா? என்பது கேள்வியாக இருந்து வருகிறது.






