இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஆசஸ் டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் மூன்று போட்டிகளை வென்று ஆஸ்திரேலியா ஏற்கனவே தொடரை வென்று இருந்தது. மேலும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிட்னி மைதானத்தில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
ரூட் ஹெட் அபாரம்
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இங்கிலாந்து அணிக்கு முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்து 160 ரன்கள் எடுத்தார். அந்த அணி 384 ரன்கள் எடுத்தது. மைக்கேல் நேசர் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு டிராவீஸ் ஹெட் 163 ரன்கள், கேப்டன் ஸ்மித் 138 ரன்கள் குவித்தார்கள். ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 567 ரன்கள் குவித்தது. பிரைடன் கார்ஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.
போராடிய ஜேக்கப் பெத்தேல்
இதைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜேக்கப் பெத்தேல் மட்டும் தனியாக போராடி தனது முதல் சதத்தை அடித்து 154 ரன்கள் குவித்தார். இறுதியாக 342 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதையும் படிங்க : குறிச்சு வச்சுக்கோங்க.. இந்த 24 வயசு சின்ன பையன் தான் அடுத்த சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனா வருவார் – ஆஸி முன்னாள் வீரர் கணிப்பு
இதைத்தொடர்ந்து சிறிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு ஹெட் 29, வெதரால்ட் 34, லபுசேன் 37 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியா 31.2 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த ஆசஸ் தொடரை 4-1 என்று ஆஸ்திரேலியா கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இங்கிலாந்து வழக்கம் போல் அதிரடியாக விளையாடி தொடரை இழந்திருக்கிறது.






