சின்ன பசங்க பின்னாடி ஒளியாதீங்க.. நம்ம தோல்விக்கு இந்த விஷயம்தான் காரணம் – பாக் அகமது ஷாஜாத் பேட்டி

0
60

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி விளையாடிய விதம் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் அகமது ஷாஜத் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்

முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணியின் டேவிட் மில்லர் அதிகபட்சமாக 40 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி பந்துகளை வீணடித்து விளையாடியது. இதில் அணியின் கேப்டன் ரிஸ்வான் 64 பந்துகளை எதிர்கொண்டு 74 ரன்கள் குவிக்க, மற்றொரு ஆட்டக்காரர் பாபர் அசாம் டக் அவுட் ஆகி வெளியேறினார். மேலும் மற்ற பாகிஸ்தான் வீரர்கள் அதிரடியாக விளையாடாத காரணத்தால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்த சூழ்நிலையில் அதே நாட்டு முன்னாள் வீரரான முகமது ஷாஜாத் சீனியர் வீரர்கள் அணிக்காக முன் நின்று விளையாட வேண்டும் எனவும் இளைஞர்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்ள கூடாது என சில கடுமையான விமர்சனங்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இளைஞர்களுக்கு பின்னாள் ஒளிய கூடாது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆட்டம் நெருக்கமாகச் சென்றது. ஆனால் போதிய அளவில் இல்லை. முதலில் தென்னாப்பிரிக்க அணி அவர்கள் விளையாடிய விதத்தில் இருந்து 180 ரன்களுக்கு அதிகமாக விளையாட விட்டது நம்ப முடியாத வகையில் இருந்தது. அதற்குப் பிறகு நாங்கள் இந்த இலக்கை எவ்வாறு துரத்தினோம் என்பது ஆரம்பம் முதலே வினோதமாக இருந்தது. அதிகமான டாட் பந்துகள் மற்றும் தேவையான அணுகுமுறை இல்லாதது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இதையும் படிங்க:ஜெய்ஸ்வால் ஒழுங்கீனமான நடவடிக்கை.. கோவம் அடைந்த ரோஹித் சர்மா.. காரணம் என்ன?. முழு விபரம்

இதில் குறிப்பாக மூத்த வீரர்கள் முன் நின்று அணியை வழிநடத்த வேண்டுமே தவிர இளைஞர்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்ள கூடாது. இதில் சாய்ம் அயூப், அப்ரிடி மற்றும் அப்ரார் மட்டுமே நேர்மறையாக விளையாடினர் என்று கூறி இருக்கிறார். தற்போது பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் பின்தங்கி இருப்பதால் அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியமாக ஒன்றாக இருக்கிறது. எனவே அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

- Advertisement -