2025 ஐபிஎல் இடையில் நிறுத்தப்படுகிறதா.. தொடர் முழுதும் நடக்காதா?.. பிசிசிஐ தரப்பில் வெளியான தகவல்

0
295
IPL

தற்போது இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதட்டம் அதிகரித்து இருக்கின்ற காரணத்தினால், இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடைபெறுமா என்பது குறித்து பிசிசிஐ தரப்பில் செய்தி வெளியாகியிருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு காஷ்மீரில் நடைபெற்ற விரும்பத்தகாத ஒரு சம்பவத்தினால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் அதிகரித்து இருக்கிறது. நேற்று இந்தியா தரப்பில் இதற்கு பதிலடி நடவடிக்கைகள் எதிர்க்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்வி எழுந்ததற்கு பிசிசிஐ பதில் அளித்து இருக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடருக்கு ஏன் சிக்கல்?

தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் 18வது ஆண்டாக நடத்திவரும் ஐபிஎல் தொடர் இந்திய வீரர்கள் மட்டுமே விளையாடுகின்ற தொடராக இல்லை. இதில் பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் விளையாடுகிறார்கள். எனவே அவர்களின் பாதுகாப்பு மிகவும் இன்றியமையாத விஷயமாக இருக்கிறது.

இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதட்டம் அதிகரித்திருப்பதால் வீரர்களுக்கு சரியான பாதுகாப்பு கிடைக்குமா என்பது அந்தந்த நாட்டு அரசாங்கங்களுக்கு கேள்வியாக இருக்கிறது. எனவே அவர்கள் தங்களின் வீரர்களை திரும்பப் பெறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. மேலும் உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டி இருந்தால், ஐபிஎல் தொடருக்கு பாதுகாப்பு கொடுப்பது சிக்கல் ஆகும். எனவே ஐபிஎல் தொடர்ந்து நடப்பது தற்போது கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடர் நடக்குமா?

இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் இருந்து அதிகாரி ஒருவர் பேசும் பொழுது “பிசிசிஐ சூழ்நிலைகளை மிகவும் கவனமாக கவனித்து வருகிறது. சூழ்நிலைகளை பொறுத்து நாங்கள் அழைப்புகளை எடுப்போம். தற்போதைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையின் படி ஐபிஎல் தொடர்ந்து நடைபெறும்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ஹர்திக் நீங்க செஞ்ச அந்த ஒரு தப்பு.. மும்பை பிளே ஆஃப்க்கு உலை வெச்சிடுச்சு – கவாஸ்கர் விமர்சனம்

மேலும் இதுகுறித்து ஐபிஎல் சேர்மேன் அருண் துமால் பேசும் பொழுது “ஐபிஎல் ஆட்சி மன்றம் தற்பொழுது நிலைமையை கவனித்து வருகிறது. நிறைய யூகங்கள் செய்திகளாக வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கு எங்களால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் நாட்டின் நலனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்கின்ற சூழ்நிலை வரும் பொழுது, இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அரசாங்கத்துடன் சேர்ந்து நிற்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -