நேற்று ஐபிஎல் தொடரில் 55வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்த ஒரு தவறு அந்த அணியின் பிளே ஆப் வாய்ப்புக்கு பெரிய பிரச்சனையை உண்டு செய்து விட்டதாக சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்று இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற இந்த போட்டியில் மழை நிறைய முறை குறிப்பிட்டது. இந்த போட்டியில் மாறி மாறி இரண்டு அணிகளும் வெற்றி வாய்ப்பில் இருந்தார்கள். இறுதிக்கட்டத்தில் மும்பை அணிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருந்தது. ஆனால் ஹர்திக் பாண்டியா செய்த ஒரு தவறு அந்த அணியை தோல்வியடைய வைத்து விட்டது.
மும்பை உட்கார்ந்து பேச வேண்டும்
நேற்று ஹர்திக் பாண்டியா தான் வீசிய முதல் ஓவரில் 11 பந்துகள் வீசி இருந்தார். மேலும் இறுதி ஓவரை வீச தான் முன்வரவில்லை. இத்துடன் கடைசிப் பந்தில் ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு கொண்டு வருவதற்கு கையில் இருந்த ரன் அவுட்டை தவறவிட்டார். மேலும் பேட்டிங்கில் ஆடுகளத்தை புரிந்து கொள்ளாமல் தவறான ஷாட் விளையாடி விக்கெட் இழந்தார். ஒரு போட்டியில் கேப்டனாக பேட்ஸ்மேனாக, பவுலராக பல தவறுகளை அவர் செய்தார்.
இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசும்பொழுது “மும்பை இந்தியன்ஸ் அணி ஓவர்களை வீசுவது குறித்து அதிக நேரம் எடுத்துக் கொண்டது. இதன் காரணமாக அவர்களுக்கு அபராதம் இருக்க வேண்டி இருந்தது. இதெல்லாம் இயல்பாக வரக்கூடிய விஷயங்கள்தான். ஆனால் இதனால் நீங்கள் பிளே ஆப் வாய்ப்பை இழக்க வேண்டிய சூழ்நிலையும் வந்துவிடும். இதனால்தான் மும்பை இந்தியன்ஸ் இது சம்பந்தமாக உட்கார்ந்து பேச வேண்டும்”
ஹர்திக் பாண்டியா செய்த தவறு
“ஹர்திக் பாண்டியா சர்வதேச கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக கடைசி ஓவரை வெற்றிகரமாக வீசி இந்திய அணிக்கு வெற்றியை கொண்டு வந்திருக்கிறார். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியின் இறுதி ஓவரையும் மிக வெற்றிகரமாக பேசியிருக்கிறார். இப்படி இருக்கும் பொழுது நேற்று அவர் இறுதி வரை வீசியிருக்க வேண்டும்”
இதையும் படிங்க : ப்ளே ஆப் வாய்ப்பு.. சிக்கலில் மாட்டிய மும்பை.. 3 அணிகளுக்கு நடக்கும் வினோத ரேஸ்.. புள்ளி பட்டியல் விபரம்
“மேலும் நாங்கள் கிரிக்கெட் வர்ணனையில் இருந்த பொழுது தீபக் சகர் கடைசி ஓவரை வீசியது இல்லை என்று கேள்விப்பட்டோம். அவரால் அந்த வேலையை செய்ய முடியாது என்று தெரிகிறது. அப்படி இருக்கும் பொழுது இறுதி ஓவர்களை வீசிய அனுபவம் இருக்கும் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதை செய்யாமல் விட்டது பெரிய தவறு” என்று கூறியிருக்கிறார்






