தற்போது இடைநிறுத்தப்பட்டிருக்கும் 18 ஆவது ஐபிஎல் சீசன் மீண்டும் எப்பொழுது துவங்கலாம் என்பது குறித்து ஓரளவுக்கு நம்பகமான செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பதட்டத்தின் காரணமாக ஐபிஎல் தொடரை இடையில் ஒரு வாரம் நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்கப்படுவது உறுதியாக இருக்கும் நிலையில் எந்த தேதியில் தொடங்கப்படலாம் என்கின்ற செய்திகள் வெளியாகியிருக்கிறது.
தற்போது மீண்டும் ஐபிஎல் தொடரை நடத்துவதில் இருக்கும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பத்து அணிகளில் இருந்து வெளியேறி இருக்கும் அனைத்து வெளிநாட்டு வீரர்களையும் மீண்டும் அழைத்து வருவதுதான். ஐபிஎல் தொடரை மீண்டும் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் நடத்துவது தொடருக்கு போட்டி தன்மையை இல்லாமல் செய்து விடும்.
மேலும் ஐபிஎல் தொடருக்கு மீண்டும் வெளிநாட்டு வீரர்கள் திரும்பவில்லை என்றால், இந்தியாவில் உள்நாட்டு பாதுகாப்பு இல்லை என்பது மாதிரியான செய்திகள் வெளியில் பரப்பப்பட்டு விடும். இதன் காரணமாக ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கு வெளிநாட்டு வீரர்கள் மிகவும் முக்கிய தேவையாக இருக்கிறார்கள். எனவே இவர்களை மறுபடியும் இந்தியா கொண்டு வந்து சேர்ப்பதற்கு நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சைக்கியா பேசும்பொழுது மீண்டும் தொடர் நடப்பது உறுதி என்றும், வெளிநாட்டு வீரர்களை கொண்டு வருவதற்கு நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகும் என்றும், அணி நிர்வாகங்கள், அணி உரிமையாளர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் மூவரிடமும் பேச வேண்டும் என்றும் குறிப்பாக இந்திய அரசிடம் இது தொடர்பாக சீக்கிரத்தில் அனுமதி பெற பேச இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : வெளியேறிய வீரர்கள்.. ஆனால் பாண்டிங் செய்த துணிச்சலான மாஸ் சம்பவம்.. இந்திய ரசிகர்கள் பாராட்டு
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் இந்த மாதம் மே 15 அல்லது 16ஆம் தேதி மீண்டும் உறுதியாக துவங்கப்படும் என்று நம்பகமான செய்திகள் தெரிவிக்கிறது. இன்னும் ஐந்து முதல் ஆறு நாட்களில் ஐபிஎல் தொடர் ஆரம்பித்து விடும் என்று நம்பப்படுகிறது. ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக மீண்டும் இந்தியாவில் நடத்த முடிக்க வேண்டிய பொறுப்பு இந்திய கிரிக்கெட் வாரியம் தாண்டி இந்திய அரசுக்குமே அரசியலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!