2025 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி டைட்டன்ஸ் ஸ்பான்சர் இல்லாமல் விளையாடும் என செய்திகள் தெரிவிக்கிறது. வணிக ரீதியாக மிகப்பெரிய கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு டைட்டில் ஸ்பான்சர் இல்லாமல் விளையாடுவது அதிர்ச்சியானதாக அமைந்திருக்கிறது.
தற்போது ஆன்லைன் கேம்லிங் சம்பந்தமாக புதிய சட்டம் கொண்டு வந்திருக்கின்ற காரணத்தினால், தற்போது இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சர் ஆக இருக்கும் ட்ரீம் 11 உடனடியாக தான் விலகிக் கொள்வதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருக்கிறது.
ட்ரீம் 11 வருடத்துக்கு 358 கோடி அல்லது உள்நாட்டு போட்டிக்கு 3 கோடி, வெளிநாட்டுப் போட்டிக்கு ஒரு கோடி என கல்வி நிறுவனமான பைஜூஸ் டைட்டில் ஸ்பான்ஸராக சிரமத்தில் இருந்த பொழுது உள்ளே வந்தது. அதற்குப் பிறகு தொடர்ந்து இந்திய அணிக்கு ட்ரீம் 11 டைட்டில் ஸ்பான்சர் ஆக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய சட்டத்தின் காரணமாக இவைகள் முடங்கப் போகின்றன. இதன் காரணமாக பாதியிலேயே ட்ரீம் 11 டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகிக் கொள்வதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் நேரடியாக வந்து தெரிவித்திருப்பதாக செய்திகள் கூறுகிறது.
இதுபோல ஏதாவது சட்டம் வந்து நிறுவனம் முடங்கினால் பாதியில் வெளியேறும் பொழுது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏதும் அபராதம் தரவேண்டியதில்லை என்று ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறதாம். இதன் காரணத்தால் தற்பொழுது ட்ரீம் 11 நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பாதியில் விலகினாலும் அபராதம் ஏதும் செலுத்தாது.
இதையும் படிங்க : 2026 ஐபிஎல்லில் எம்எஸ் தோனி ஆடனும்.. இந்த ஒரு விஷயத்தை அவரை விட்டா யாருமே செய்ய முடியாது – சிஎஸ்கே வீரர் கருத்து
மேலும் ஆசிய கோப்பைக்கு இந்திய அணி டைட்டில் ஸ்பான்சர் இல்லாமல் சென்று விளையாடும் என்று செய்திகள் கூறுகிறது. இதற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் டென்டரை அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் டைட்டில் ஸ்பான்சர் இல்லாமல் விளையாடுவது உலக கிரிக்கெட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.