பிசிசிஐ அதிரடி நடவடிக்கை.. கம்பீர் மேனேஜர் மீது பாய்ந்தது.. இனி வீரர்களுக்கும் வருகிறது தடை

0
792
BCCI

இந்திய அணியினர் உடன் அவர்களது குடும்பத்தார்கள் தங்குவதற்கு பிசிசிஐ புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்திருப்பதாகவும் இதில் முதல் முறையாக கம்பீர் மேனேஜர் தண்டிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது.

இந்திய அணி வீரர்களின் நீண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணங்களையும் போது முழுவதுமாக அவர்களது குடும்பத்தினர் அவர்களுடன் தங்குவது அவர்களது செயல் திறனை பாதிப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் முழுமையாக நம்புகிறது. எனவே இதற்கு இரண்டு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

பழைய புதிய நடைமுறை

முன்பு இந்திய கிரிக்கெட்டில் வீரர்களுடன் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் தங்குவதற்கு கட்டுப்பாடுகள் இருந்தது. சில நாட்கள் மட்டுமே உள்நாடு அல்லது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியினர் உடன் அவர்களது குடும்பத்தார் தங்க அனுமதிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் முழுமையாக வீரர்களுடன் குடும்பத்தினர் தங்க அனுமதித்தது. ஆனால் மீண்டும் பழைய முறைக்கு திரும்பி வந்து 45 நாட்களுக்கு மேல் நீடிக்கும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் குடும்பத்தினர் 14 நாட்கள் மட்டுமே அவர்களுடன் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதற்கும் குறைவான சுற்றுப்பயணங்களில் ஏழு நாட்கள் மட்டும் தாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் விதியை மாற்றிக் கொண்டுள்ளதாக செய்திகள் கூறுகிறது.

- Advertisement -

கம்பீர் மேனேஜருக்கு தடை

இத்துடன் கம்பீர் மேனேஜர் இந்திய வீரர்கள் தங்கும் ஹோட்டல் அறையில் தங்கியதாகவும், மேலும் அணி பேருந்தில் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட்டில் ஒரு பயிற்சியாளரின் தனிப்பட்ட மேனேஜர் இப்படி பயணம் செய்தது இதுவே முதல் முறை என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அதிரடியாக கம்பீர் மேனேஜர் வீரர்களின் ஹோட்டலில் தங்குவது, அணி பேருந்தில் பயணிப்பது, மேலும் விஐபி கேலரியில் போட்டியை பார்ப்பது எல்லாவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : பும்ராவுக்கு அழுத்தம் தராம.. இதை செய்ய விடுங்க.. அப்ரோ அவங்க 2 பேர் பத்தி பேச விரும்பல – கபில்தேவ் கருத்து

மேலும் அணி ஒற்றுமைக்காக எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் அணி பேருந்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்கின்ற இன்னொரு கட்டுப்பாட்டையும் இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்திருக்கிறது. இனி வீரர்கள் தனிப்பட்ட முறையில் தங்களுடைய வாகனங்களில் மைதானத்திற்கு வருவது, மைதானத்தில் இருந்து வெளியேறுவது போன்றவற்றை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -