பும்ராவுக்கு அழுத்தம் தராம.. இதை செய்ய விடுங்க.. அப்ரோ அவங்க 2 பேர் பத்தி பேச விரும்பல – கபில்தேவ் கருத்து

0
21

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார்.

இந்த சூழ்நிலையில் அவரது எதிர்கால கேப்டன்ஷிப் குறித்து இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பும்ராவுக்கு சரியான அவகாசம் வேண்டும்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் விலக அந்தப் போட்டிக்கு பும்ரா தலைமை தாங்கி இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார். அதற்குப் பிறகு ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியான தோல்வியை தழுவ ஐந்தாவது போட்டியில் திரும்பவும் பும்ரா கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணி வழி நடத்தினார். ஆனால் ஐந்தாவது போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட பாதியில் வெளியேறிய நிலையில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மாவிற்கு பிறகு டெஸ்ட் அணியின் கேப்டனாக பும்ராவே வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் காயமும் அவருக்கு தொந்தரவு தரக்கூடிய வகையில் இருப்பதால் இதனையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த சூழ்நிலையில் பும்ரா கேப்டனாக பொறுப்பேற்றால் அவருக்கு சரியான அவகாசம் கொடுக்க வேண்டும் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நான் விமர்சனம் செய்ய விரும்பல

இது குறித்து கபில்தேவ் விரிவாக கூறும்போது “பும்ராவுக்கு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பதவி கொடுத்தால் அவருக்கும் சரியான கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும் விராத் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து கேட்கிறீர்கள். அவர்கள் இருவருமே இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய வீரர்கள். இது அவர்களுக்கு சரியான நேரம் என்று நினைக்கும் போது விளையாடுவார்கள் இல்லையெனில் அவர்களாக ஓய்வினை அறிவித்து விடுவார்கள் என்று நம்பலாம்.

இதையும் படிங்க:12 பந்து 0 ரன் 2 விக்கெட்.. ரபாடா செம்ம பவுலிங்.. எஸ்ஏ டி20 லீக்.. தினேஷ் கார்த்திக் அணியை வீழ்த்தி எம்ஐ வெற்றி

ஆனால் இறுதி முடிவு எப்போதுமே அவர்கள் கையில் தான் உள்ளது. மற்றவர்களின் தீர்ப்பு குறித்து நான் எப்படி கருத்து தெரிவிக்க முடியும். தேர்வாளர்கள் அது குறித்து ஏற்கனவே முடிவு செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் இப்போது ஏதாவது சொன்னால் அவர்கள் மீது விமர்சனம் செய்வதாக இருக்கும். எனவே விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து தேர்வுக்கு குழுவினர்தான் முடிவு செய்ய வேண்டும். நான் எதைப் பற்றியும் கூறி விமர்சனம் செய்ய விரும்பவில்லை” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -