இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ 6 அதிரடி உத்தரவு.. மீறினால் கடுமையான தண்டனை.. வெளியான செய்தி

0
81
BCCI

இந்திய அணி சமீபத்தில் தொடர் தோல்விகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்து வருகின்ற காரணத்தினால் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு புதிய அதிரடியான ஆறு உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது.

தற்போது தொடர் தோல்விகளின் காரணமாக இந்திய அணியில் குழப்பமான சூழ்நிலை காணப்படுகிறது. மேலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பேட்டிங் ஃபார்ம் இல்லாதது பெரிய தோல்விகளை கொண்டு வருகிறது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அணிக்குள் சில முக்கிய சீர்திருத்தங்களை செய்ய முடிவு எடுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

- Advertisement -

வெற்றிகளால் மெத்தனமான வீரர்கள்

இந்திய அணி நல்ல முறையில் வெற்றி பெற்று கொண்டு வந்த பொழுது அணியில் பின்பற்ற வேண்டிய அடிப்படை விஷயங்களை இந்திய வீரர்கள் சரியாக பின்பற்றாமல் இருந்திருக்கிறார்கள். பயிற்சிக்கு அணி பேருந்தில் வராமல் தனிப்பட்ட முறையில் வந்தது, தங்களுடைய தனிப்பட்ட மேனேஜர்களை அணி உடன் கூட்டி வந்தது, நிறைய உடைமைகளை கொண்டு வந்தது என நிறைய தவறுகள் செய்திருக்கிறார்கள்.

தற்போது ஏற்பட்டிருக்கும் தோல்விகள் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த எல்லா விஷயங்களுக்கும் தடை விதித்து, புதிதாக அதிரடியான ஆறு கட்டுப்பாடுகள் கொண்ட உத்தரவை வெளியிட்டு இருக்கிறது. இந்த கட்டுப்பாடுகளை மீறும் இந்திய அணி வீரர்கள் கடுமையான தண்டனையை சந்திக்க வேண்டும் எனவும் பிசிசிஐ எச்சரிக்கை செய்திருக்கிறது.

- Advertisement -

பிசிசிஐ விதித்த ஆறு கட்டுப்பாடுகள்

இது குறித்து பிசிசிஐ வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “உள்நாட்டு போட்டிகளில் அனைத்து வீரர்களும் கட்டாயம் விளையாட வேண்டும். போட்டிகளின் போது வீரர்கள் அனைவரும் ஒன்றாக பயணிக்க வேண்டும். தனியாக செல்லக்கூடாது. வீரர்கள் குறிப்பிட்ட அளவு உடைமைகளை மட்டுமே கொண்டுவர வேண்டும். அதைத் தாண்டி எடுத்து வந்தால் அதற்கான செலவை அவர்களே செய்ய வேண்டும்”

இதையும் படிங்க : ரோகித் செஞ்ச இதை எத்தனை கேப்டன் செஞ்சிருக்காங்க?.. இதுக்காகவே அவர விமர்சிக்காதிங்க – யுவராஜ் சிங் கோரிக்கை

“மேனேஜர் மற்றும் சமையலுக்கான உதவியாளர் ஆகியோர்களை தனிப்பட்ட முறையில் வீரர்கள் கூட்டிக் கொண்டு வரக்கூடாது. பயிற்சியை முடித்துவிட்டு வீரர்கள் சீக்கிரம் கிளம்ப கூடாது. அனைத்து வீரர்களுடனும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும். போட்டி காலத்தில் வீரர்கள் தனிப்பட்ட படப்பிடிப்பு போன்றவற்றை நடத்தக் கூடாது. இதில் ஏதாவது தளர்வு வேண்டுமென்றால், அணியின் கேப்டன் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுவிடம் முன் அனுமதி பெற வேண்டும்” என்று கூறப்பட்டு இருக்கிறது.

- Advertisement -