இந்திய அணியில் தன் மகனுக்கு நடந்த ஒரு அவமானமே அவர் ஓய்வு பெறுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என ரவிச்சந்திரன் அஸ்வின் தந்தை பரபரப்பாக பேட்டி அளித்திருக்கிறார்.
நேற்று மூன்றாவது டெஸ்ட் முடிவில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இந்த திடீர் முடிவு கிரிக்கெட் உலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனது ஓய்வுக்கான காரணம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாக பேசாத நிலையில் அவரது தந்தை பேசி இருப்பது பரபரப்பை அதிகமாக்கி இருக்கிறது.
எனக்கு கடைசி நிமிடம்தான் தெரியும்
இதுகுறித்து அஸ்வின் தந்தை ரவிச்சந்திரன் அவர்கள் பேசும்போது “எனக்கும் கடைசி நிமிடம்தான் தெரிய வந்தது. அவருடைய மனதில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று குறித்து எனக்கு தெரியவில்லை. அவர்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டார். நான் அதை முழு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். அது பற்றிய எந்த உணர்வும் எனக்கு கிடையாது. ஆனால் அவர் தனது ஓய்வை அறிவித்த விதத்தில் நான் ஒரு பகுதி மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு விதத்தில் நான் மகிழ்ச்சி அடையவில்லை. ஏனெனில் அவர் தொடர்ந்து இருந்திருக்க வேண்டும்”
“ஓய்வு பெறுவது என்பது அஸ்வினின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் முடிவு. இதில் நான் நிச்சயம் தலையிட முடியாது. ஓய்வை அவர் இப்படி அறிவித்ததில் பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம். அது குறித்து அஸ்வினுக்கு மட்டுமே தெரியும். ஒருவேளை அணியில் நடந்த அவமானமாக இருக்கலாம்”
தொடர்ந்து நடந்த அவமானம்
“அவருடைய ஓய்வு எங்களுக்கு உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அவர் கடந்த 14, 15 ஆண்டுகளாக களத்தில் தொடர்ந்து விளையாடி வந்தார். இருந்த போதிலும் நாங்கள் அவரது இந்த அறிவிப்பை எதிர்பார்த்து இருந்தோம். ஏனென்றால் அவருக்கு அணியில் தொடர்ந்து அவமானம் நடந்து கொண்டே இருந்தது. அனேகமாக இதனால்தான் அவர் ஓய்வு முடிவை எடுத்து இருப்பார்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : அஸ்வின் விஷயத்தில் விராட் கேப்டனாக இருந்தால் கதையே வேற.. கம்பீர் ரோகித் பெரிய தப்பு பண்ணிட்டாங்க – பசித் அலி விமர்சனம்
ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணி தொடர்ந்து இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு மிகவும் முக்கியமான காரணமாக இருந்திருக்கிறார். கடினமாக உழைத்து அவர் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றாலும், ஆனால் அவரை கடந்த முறை இறுதிப் போட்டியில் விளையாட வைக்கவில்லை. மேலும் ஆசியா தாண்டி வெளியில் செல்லும் பொழுதும் அவரை விளையாட வைப்பதில்லை. நேற்று வந்த வாஷிங்டன் சுந்தருக்கு முதல் வாய்ப்பு ஆஸ்திரேலியாவில் கொடுக்கப்பட்டது. இதைத்தான் அவரது தந்தை அவருக்கு நடந்த அவமானம் என்று கூறுகிறார்!






