இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்ட சுப்மன் கில்லுக்கு அடுத்து இன்னொரு புதிய பிரச்சனை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து பிசிசிஐ என்ன முடிவெடுக்கும்? என கிரிக்கெட் வட்டாரத்தில் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு இருக்கிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் நியூசிலாந்து அணிக்கு எதிராக, இந்திய அணி சொந்த மண்ணில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் மட்டும் இல்லாமல், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்தும் கில் நீக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜனவரி 11ஆம் தேதி விளையாட இருக்கிறது.
அதேசமயத்தில் இந்திய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நாளை மறுநாள் டிசம்பர் 24ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட வேண்டும் என தொடர்ந்து வெளியில் இருந்து அழுத்தம் தரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரில் கில் விளையாடாத நிலையில் அவர் விஜய் ஹசாரே டிராபியில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மேலும் கடைசியாக அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு இருப்பதால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி இரண்டு டி20 போட்டிகளில் விளையாட வில்லை என்று சொல்லப்பட்டது.
இதையும் படிங்க : ஆஸியோடு சேர்ந்து இங்கிலாந்து அணியை சீரியஸாக கலாய்த்த ரோகித் சர்மா.. இப்படி பண்ணலாமா? – என்ன நடந்தது
இந்த நிலையில் அவர் பஞ்சாப் அணிக்காக விஜய் ஹசாரே டிராபியில் விளையாட வேண்டியது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதியில் உள்ளது. தேசிய அணிக்காக விளையாடாத பொழுது மாநில அணிக்காக விளையாடுவது கட்டாயம். எனவே கில் விளையாடுவாரா இல்லையா? விளையாட மாட்டார் என்றால் அதற்கான காரணத்தை வெளியிட வேண்டும் என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.