இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பயிற்சியில் ஈடுபட்ட கில் பந்துகளை சந்தித்து விளையாடுவதில் மிகவும் சிரமப்பட்டார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இந்திய டி20 அணியில் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக இடம்பெற்ற துணை கேப்டன் கில் யுஏஇ அணிக்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே ஆட்டம் இழக்காமல் விளையாடினார். ஆனால் பாகிஸ்தான் மற்றும் ஓமான் அணிகளுக்கு எதிராக ரன் அடிக்க முடியாமல் வெளியேறினார்.
கில்லின் தீராத பிரச்சனை
ஆரம்பகால முதல் கில்லுக்கு இடதுகை சுழல் பந்து வீச்சில் நிறைய தடுமாற்றங்கள் இருந்து வருகிறது. பவர் பிளேவில் இந்த பந்துகளை எதிர்கொள்ளும் பொழுது அவரால் பெரிய ஷாட் விளையாடி ரன்கள் கொண்டுவர முடியவில்லை. அதே சமயத்தில் அபிஷேக் ஷர்மா மிக சாதாரணமாக விளையாடுகிறார்.
மேலும் கில்லுக்கு இடதுகை வேகப் பந்துவீச்சாளர்களிடமும் பிரச்சனை இருக்கிறது. கடந்த போட்டியில் ஓமான் அணிக்கு எதிராக அந்த அணியின் இடதுகை வேகப் பந்துவீச்சாளரிடம் கில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறி இருந்தார். இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக ரன்களடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
அபிஷேக் சர்மா அறிவுரை
இன்று பயிற்சியில் அபிஷேக் சர்மா கில்லுக்கு இடதுகை சுழல்பந்து வீசியும், த்ரோ டவுன் வீசியும் பயிற்சி கொடுத்தார். அப்போது அவருடைய சுழல் பந்துவீச்சை ஸ்வீப் ஷாட் அடிக்க கில் மிகவும் தடுமாறினார். இந்த நேரத்தில் கொஞ்சம் இடம் கொடுத்து அதே பந்தை ஆப் சைடு எக்ஸ்ட்ரா கவரில் தூக்கி அடிக்கும்படி அபிஷேக் ஷர்மா கில்லுக்கு அறிவுரை கூறினார். பின்பு அதை முயற்சி செய்து அதிலும் கில் தடுமாறினார்.
இதையும் படிங்க : வாய்விட்ட ரசிகர்கள்.. பங்களாதேஷிடம் தோற்ற இலங்கை.. இந்தியாவுக்கு கிடைத்த முக்கிய பாடம்
இதற்கு அடுத்து வேகப்பந்து வீச்சில் சில நல்ல ஷாட் விளையாடினார். ஆனால் இடதுகை வேகப் பந்துவீச்சாளரிடம் சரிவர விளையாட முடியாமல் எட்ஜ் ஆகியது. எனவே கில்லுக்கு மீண்டும் பழைய பிரச்சினைகள் தலை தூக்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயமும் உருவாகி இருக்கிறது. ஒருவேளை இன்றும் அவர்தான் அடிக்கவில்லை என்றால் விமர்சனங்கள் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.






