நேற்று ஆசிய கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணியிடம் இலங்கை அணி தோல்வி அடைந்தது இலங்கை ரசிகர்களை பெரிய அளவில் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதே சமயத்தில் இலங்கை அணியின் தோல்வியிலிருந்து இந்திய அணிக்கும் பாடம் கிடைத்திருக்கிறது.
நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் பெரிய அணிகளில் பங்களாதேஷ் அணிக்கு கடைசி இடமே கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த அணி தங்கள் பிரிவில் பலம் வாய்ந்த ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.
இலங்கை அணியின் தோல்வி காரணம்
இலங்கை அணி நிர்வாகம் தங்கள் பேட்டிங் வரிசையை பவுலிங் வரிசையை மிகவும் பலவீனப்படுத்தி ஒன்பது வரையில் நீட்டித்து வைத்தது தோல்விக்கு மிகவும் முக்கிய காரணமாக இருந்தது. அந்த அணியில் பிரதான பவுலர்களாக நுவன் துஷாரா, வனிந்து ஹசரங்கா மற்றும் துஷ்மந்த சமீரா என மூவர் மட்டுமே இருந்தார்கள்.
இதைத் தாண்டி எட்டு ஓவர்களை ஆல்ரவுண்டர்களிடம் இருந்து வாங்க வேண்டியதாக இருந்தது. இந்த ஓவர்களுக்காக காத்திருந்து பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள் அட்டாக் செய்து விளையாடியது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதே சமயத்தில் இதிலிருந்து இந்திய அணிக்கும் ஒரு பாடம் கிடைத்திருக்கிறது.
இந்தியாவுக்கு கிடைத்த பாடம்
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளில் பும்ரா இரண்டு போட்டிகளில் விளையாடினார். இந்த இரண்டு போட்டிகளிலும் அவர் பவர் பிளேவில் முழுதாக மூன்று ஓவர்கள் வீசினார். கடைசி கட்டத்தில் அவருக்கு ஒரு ஓவர் மட்டுமே மீதம் இருந்தது.
இதையும் படிங்க: நினைச்ச ரன் கிடைச்சது.. ஆனா நாங்க கூட்டிட்டு வந்த பங்களாதேஷ்கிட்டயே தோத்துட்டோம் – சரித் அசலங்கா பேட்டி
தற்போது துபாய் கண்டிஷன் பேட்டிங் செய்வதற்கு ஓரளவுக்கு நல்ல நிலைக்கு மாறி வருகிறது. எனவே பும்ராவை எடுத்ததும் மூன்று ஓவர்கள் வீச வைப்பதை நிறுத்த வேண்டிய அவசியம் உருவாகி இருக்கிறது. ஏனென்றால் கடைசிக் கட்டத்தில் சுழல் பந்துவீச்சாளர்களை நம்பி போவது சிரமமாக மாறிவிட்டது. எனவே ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக மாறிக் கொண்டிருப்பதை புரிந்து இந்திய அணி நிர்வாகம் மாறிக்கொள்ள வேண்டும்!






