இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்ததாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் செக் வைத்து, டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லுக்கு இன்னொரு அதிர்ஷ்டமான வாய்ப்பையும் கொடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
தற்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இரண்டு வடிவ கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே தொடர்கிறார்கள். அதே சமயத்தில் சுப்மன் கில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் இந்திய அணிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அவருக்கு டி20 அணியில் தற்காலிகமாக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
பிசிசிஐ வைக்கும் செக்
ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு 2027ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்ற காரணத்தினாலும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு 40 வயதை தொட்டுவிடும் என்பதாலும், மேலும் இவர்களுக்கு தேவையான பயிற்சி ஆட்டங்கள் கிடைக்காது என்பதாலும் பிசிசிஐ வேறு விதமாக யோசித்து வருவதாக தெரிகிறது.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிடம் உடல் தகுதி மற்றும் அவர்களின் ஆட்ட தகுதி குறித்து முன்கூட்டியே பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்திருப்பதாக செய்திகள் கூறுகிறது. ஏனென்றால் அவர்களுக்கு பதிலாக யாரையாவது விளையாட வைக்க வேண்டும் என்றாலும் உலகக் கோப்பைக்கு முன்பாக போதிய போட்டிகள் கொடுக்க வேண்டி இருக்கிறது. மேலும் இருவரையும் உலகக்கோப்பை வரை எடுத்துச் செல்ல பிசிசி விரும்பவில்லை என்றும் தெரிகிறது. எனவே இவர்கள் இருவரும் சீக்கிரத்தில் முழுவதுமாக ஓய்வு பெறலாம் என்று கூறப்படுகிறது.
கில்லுக்கு அடித்த அதிர்ஷ்டம்
மேலும் சில காலமாக இந்திய டி20 அணியில் இடம் பெறாமல் இருந்து வந்த கில்லுக்கு அடுத்து ஆசிய கோப்பை தொடரில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இவருடன் சேர்த்து ஜெய்ஸ்வால் இடம்பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க : நாங்க உங்க இஷ்டத்துக்கு கைகுலுக்கி டிரா பண்ணனுமா?.. வெளுத்து எடுத்த சச்சின் – இந்திய ரசிகர்கள் ஆச்சரியம்
இதன் மூலமாக தற்போது டி20 பேட்டிங் வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அபிஷேக் சர்மா மற்றும் தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் இரண்டு சதங்கள் அடித்த சஞ்சு சாம்சன் அல்லது திலக் வர்மா ஆகிய அவரது இடத்திற்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.






