இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில்லுக்கு அடுத்ததாக மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஒன்று காத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இந்திய டெஸ்ட் அணிக்கு ரிஷப் பண்ட் மற்றும் கேஎல்.ராகுல் ஆகியோர் கேப்டன் பொறுப்புக்கான ரேஸில் முதல் இடத்தில் இருந்த பொழுது, இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வுக்குழு அதிரடியாக கேப்டன் பொறுப்பை சுப்மன் கில்லுக்கு கொடுத்து ஆச்சரியப்படுத்தியது.
ஒரே ஒரு கேப்டன்
தற்போது மூன்று வடிவ இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று கேப்டன்கள் இருந்து வருகிறார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட்டை பொருத்தவரையில் இந்திய கிரிக்கெட் வாரியம் மூன்று வடிவங்களிலும் விளையாடும் ஒரே வீரரை கேப்டன் ஆக்கவே விரும்புகிறது. கடந்த காலங்களில் தோனி மற்றும் விராட் கோலி மூன்று வடிவ இந்திய அணிகளை வழிநடத்தி இருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் வாரியம் திறமையான ஒரு வீரரை கண்டுபிடித்து அவருக்கு பெரிய அளவில் சந்தை மதிப்பை உருவாக்கி அவரை எல்லா போட்டிகளிலும் விளையாட வைக்கும். இது இந்திய கிரிக்கெட்டின் வியாபார தந்திரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அடுத்து டி20 இந்திய அணிக்கு சூரியகுமார் யாதவுக்கு பிறகு சுப்மன் கில்லை கேப்டனாக கொண்டுவர முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
பாதிக்கப்பட போகும் இரண்டு வீரர்கள்
தற்போது இந்திய டி20 அணிக்கு அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக இருந்து வருகிறார்கள். கில் உள்ளே வரும் பொழுது நிச்சயமாக சாம்சன் தன்னுடைய இடத்தை இழப்பார். அபிஷேக் ஷர்மா டி20 கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பதால், மேலும் பகுதி நேரமாக பந்து வீச முடியும் என்பதால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.
இதையும் படிங்க : ரோகித்த ஆடவே வச்சிருக்க கூடாது.. பொய்யா நாங்க ஆதரிச்சோம்.. அதுக்கு காரணம் இதுதான் – இர்பான் பதான் பேட்டி
மேலும் அதிரடி ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் ஒரு கட்டத்தில் இந்திய டி20 அணிக்கு வருவார் என்று நம்பிய நிலையில் அந்த இடம் கில்லுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும் அவர் கேப்டனாக மாறிவிட்டால் எல்லா போட்டிகளிலும் விளையாடுவார். இதன் காரணமாக ஜெய்ஸ்வால் இந்திய டி20 அணியில் இடம் பிடிப்பது கடினமானதாக மாறிவிடுகிறது. அதே சமயத்தில் விக்கெட் கீப்பர் சாம்சன் வெளியேறினால் ஜிதேஷ் சர்மா அல்லது ரிஷப் பண்ட் வாய்ப்பு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






