ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி சஞ்சு சாம்சன் கேட்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பாக சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடர்பார் எனவும், அவர் அந்த அணியின் மறுக்க முடியாத கேப்டனாக இருப்பார் எனவும் செய்திகள் வெளியாகின. இப்படியான நிலையில் தற்போது அவர் அணியை விட்டு வெளியேற விரும்புவதாக மீண்டும் செய்திகள் வெளியாகியுள்ளது.
சிஎஸ்கே அணி காரணமா?
சில மாதங்களுக்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விட்டு சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் வருகிறார் என்கின்ற செய்திகள் மிகவும் பரவலாக வெளிவந்தன. அதற்கு ஏற்றார் போல் அவரும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டியை நேரில் பார்ப்பதற்கு சென்றார். அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவும் அவர் சிஎஸ்கே அணிக்கு வருவதற்கான சிக்னல்களை கொடுத்தன.
இப்படியான நிலையில் இரு வேறு செய்திகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. ஆனால் இதில் தற்போது சஞ்சு சாம்சன் தன்னை சரியான முறையில் டிரேடிங் செய்யலாம் அல்லது ஏலத்தில் விடலாம் என்றும் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் ஒரு குறிப்பிட்ட அணிக்கு மட்டுமே செல்ல நினைக்கவில்லை என்பதும் தெளிவாகிறது.
வெளியான தகவல்கள்
இது குறித்து வெளியான அறிக்கையில் “சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திற்கும் இடையே கடுமையான மன வேறுபாடுகள் எழுந்திருப்பது உண்மை. தன்னை சரியான முறையில் டிரேடிங் செய்யவும் அல்லது ஏலத்தில் விடவோ கேப்டன் சஞ்சு சாம்சன் கேட்டுக் கொண்டிருக்கிறார்”
இதையும் படிங்க : என் பையன் ஈஸ்வரனுக்கு புஜாரா இடத்தை தரதா சொன்னாங்க.. ஆனா பிசிசிஐ அந்த சதி பண்ணுச்சு – தந்தை பேட்டி
“மேலும் அவருடைய குடும்பத்தினரும் இனி அவர் அந்த அணியில் தொடரக்கூடாது என்று விரும்புகிறார்கள். தற்போது ஐபிஎல் மற்றும் அவருடன் இணைந்து விளையாடிய வீரர்கள் சிலர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடன் சஞ்சு சாம்சனுக்கு நல்ல உறவு தற்போது இல்லை” என்று கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.






