என் பையன் ஈஸ்வரனுக்கு புஜாரா இடத்தை தரதா சொன்னாங்க.. ஆனா பிசிசிஐ அந்த சதி பண்ணுச்சு – தந்தை பேட்டி

0
16
Easwaran

இந்திய அணியில் பலமுறை தேர்வு செய்யப்பட்டும் தன் மகன் அபிமன்யு ஈஸ்வரனுக்கு விளையாட வாய்ப்பு தராத காரணம் குறித்து அவரது தந்தை இந்திய கிரிக்கெட் வாரியம் மீது குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அபிமன்யு ஈஸ்வரன் இந்திய அணியில் தேர்வானர். மேலும் இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடருக்கு கேப்டனாக செயல்பட்டார். இருந்தபோதிலும் அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

தொடர் புறக்கணிப்பு ஏன்?

இதற்கு முன்பாகவும் சில முறை இந்திய டெஸ்ட் அனுப்பி தேர்வு செய்யப்பட்ட அவரை இந்திய நிர்வாகம் போட்டியில் விளையாட வைக்கவில்லை. துவக்க வீரர்கள் யாராவது காயம் அடைந்தால் விளையாட வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தபோதிலும் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடாத பொழுதும் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

இந்த நிலையில் தன்னுடைய மகனை புஜாரா இடத்துக்கு தயார் செய்ய அப்போதைய பயிற்சியாளர் டிராவிட் கூறியதாகவும், ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் தன் மகன் ஐபிஎல் தொடரில் விளையாடாததால் வாய்ப்பை கொடுக்கவில்லை என்றும் பகிங்கரமாக அவருடைய தந்தை குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதுதான் முக்கிய காரணம்

இதுகுறித்து அபிமன்யு ஈஸ்வரன் தந்தை பேசும்பொழுது ” இந்திய ஏ அணிக்காக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார். மேலும் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு சென்றார். அந்த நேரத்தில் இந்திய பயிற்சியாளர்களின் ஆலோசனையின் பெயரில் அவர் மூன்றாவது வீரராக விளையாடினார். ஏனென்றால் புஜாரா இடத்திற்கு என் மகனை பரிசோதித்தார்கள். அவரும் அந்த இடத்தில் விளையாடி மார்க்கோ ஜான்சன் போன்ற பந்துவீச்சாளர்களை சந்தித்து சதம் அடித்து 103 ரன்கள் எடுத்தார்”

இதையும் படிங்க : அதிர்ஷ்டத்தால் லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது.. பும்ராவை நம்பி இந்திய அணி இல்லை.. முன்னாள் இங்கிலாந்து வீரர் கருத்து

“தென் ஆப்பிரிக்க தொடரில் இருந்து என் மகன் திரும்பி வந்த பொழுது விஜய் ஹசாரே தொடரில் அவன் விளையாடும் பெங்கால் அணி காலிறுதிக்கு முன்பாக வெளியேறிவிட்டது. இந்த நேரத்தில் தேர்வு குழுவினர் என் மகனை தேர்ந்தெடுப்பதற்கு காட்ட எந்த புள்ளி விவரங்களும் இல்லை. இதைவிட முக்கியமாக என் மகன் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இதன் காரணமாகவே இந்திய கிரிக்கெட் வாரியம் எனது மகனுக்கு வாய்ப்பை கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -