இந்திய கிரிக்கெட்

உலக டி20 தொடர்கள்.. அஸ்வினுக்கு நடந்த 2வது சோகம்.. ஐபிஎல்ல ஓய்வு பெறாமல் இருந்திருக்கலாமே? – ரசிகர்கள் வருத்தம்

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்ததற்கு பிறகு வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடுவது குறித்து இரண்டு சோகமான முடிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இன்று இதை அவரே அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியில் வந்து ஏலத்தை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து வெளியில் நடக்கும் டி20 தொடர்களில் விளையாட இருப்பதாக கூறினார்.

சவுதி அரேபிய சோகம்

இந்த நிலையில் ஆண்டுதோறும் சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் ஐஎல்டி டி20 லீக் மெகா ஏலத்தில் இந்த வருடம் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பெயரை கொடுத்திருந்தார். மேலும் அவரது அடிப்படை விலை ஒரு கோடி ரூபாயை தாண்டி அதிகமாக இருந்தது. இதை குறைக்க வேண்டும் என வெளியில் இருந்து அப்போது சிலர் சொல்லி இருந்தார்கள்.

இந்த சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து பெரிய அடிப்படை விலையுடன் ஏலத்திற்கு சென்றார். ஆனால் அந்த ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை யாரும் வாங்கவில்லை. இதைத்தொடர்ந்து இரண்டாவது சுற்றில் தன்னுடைய பெயரை ஏலத்தில் விட வேண்டாம் நான் ஏலத்தில் பங்கேற்கவில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிப்பு பெற்றார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய சோகம்

இதைத்தொடர்ந்து இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஸ் டி20 லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்கு விளையாட ரவிச்சந்திரன் அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இதற்காக சென்னையில் பயிற்சி செய்து வந்த பொழுது கணுக்காலில் காயம் அடைந்ததால், இந்த தொடரில் இருந்து இந்த வருடம் விலகிக் கொள்வதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஆப்கான் கிரிக்கெட்டில் ஏற்பட போகும் மிகப்பெரிய மாற்றம்.. அவர்கள் தாக்கு பிடிப்பார்களா? – வெளியான செய்திகள்

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் இன்ஸ்டாகிராமில் ” இதை நானே எழுத நினைத்தேன். இதை சொல்ல கஷ்டமாக இருக்கிறது. சென்னையில் பயிற்சி செய்த பொழுது கணுக்காலில் காயமடைந்து விட்டேன். எனவே இதற்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வில் இருக்க வேண்டும். ஒரு பந்து கூட வீசாத போதும் சிட்னி தண்டர் அணி அவர்களில் ஒருவனாக என்னை நடத்தியதை மறக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by