இந்திய கிரிக்கெட்

வேலையில்லை என்று சொன்ன டிராவிட்.. வந்த புது ஆஃபர்.. பழைய கோட்டைக்கு திரும்புவாரா? – வெளியான புதிய தகவல்கள்

இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ராகுல் டிராவிட், டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதும், அவருடைய பதவிக்காலம் முடிவுக்கு வந்ததால் விலகிக் கொண்டார். மேற்கொண்டு அவர் மீண்டும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. தற்போது ஒரு புதிய இடத்தில் இருந்து பயிற்சியாளர் பொறுப்புக்கு அழைப்பு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு அவரை தொடர்பு கொண்டதாக செய்திகள் வந்த நிலையில், அந்தச் செய்திகள் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் இருக்கின்றன. ராகுல் டிராவிட் கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இணைவது அதிகபட்ச வாய்ப்புகள் இல்லாத ஒன்றாக இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் வீரராக 2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் ஆர்சிபி அணிக்கு விளையாடினார். பிறகு 2011 ஆம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த அணியின் கேப்டன் பொறுப்பையும் அவர் ஏற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ராகுல் டிராவிட் 2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் மிக நீண்ட காலம் இந்திய அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளராக சேவை செய்தார். இளம் வீரர்களை உருவாக்குவதில்தான் அவருக்கு பெரிய விருப்பம் இருந்தது. இதே நேரத்தில் அவர் இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் பொறுப்பையும் கவனித்து வந்தார். இதற்கு அடுத்து 2021 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தார்.

- Advertisement -

டி20 உலகக் கோப்பை தொடரை வென்றதும் அடுத்து என்னவென்று செய்தியாளர்கள் கேட்ட பொழுது ” அடுத்த வாரத்தில் இருந்து நான் வேலையில்லாதவன் ஆக மாறி விடுவேன். எனக்கு ஏதும் வேலை வாய்ப்பு இருக்கிறதா? என்று நகைச்சுவையாக பேசி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஐபிஎல் தொடரில் இருந்து வாய்ப்பு வந்திருக்கிறது.

இதையும் படிங்க : 3 ஃபார்மேட் 3 இந்திய அணி.. இங்கிலாந்து மாடலில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் செல்லுமா? – கம்பீர் விளக்கம்

ராகுல் டிராவிட் கேப்டனாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தங்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ராகுல் டிராவிட்டை அணுகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த அணியின் தற்போதைய பயிற்சியாளர் சங்கக்கரா குறித்து எந்த விதமான செய்திகளும் இல்லை. ஏற்கனவே விளையாடி தலைமைப் பொறுப்பையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வகித்திருக்கின்ற காரணத்தினால் ராகுல் டிராவிட் இதை ஏற்றுக் கொள்வார் என்று செய்திகள் கூறுகிறது!

- Advertisement -
Published by

Recent Posts