அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஆக்சன் ஏலம் இந்த வருட இறுதியில் நடைபெறும் நிலையில், ஒரு அணி எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற விபரம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனி அடுத்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடுவாரா? அல்லது விளையாட மாட்டாரா? என்பது ஐபிஎல் நிர்வாகம் எடுக்கும் இறுதி முடிவுகள் மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.
2008ம் ஆண்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் மகேந்திர சிங் தோனி 2023ஆம் ஆண்டு வரை கேப்டனாக செயல்பட்டு அதில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தையும் வென்று தர உதவினார். இதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை தோனியின் தலைமையில் சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் சமீபகாலமாகவே மகேந்திர சிங் தோனி காயங்களை சந்தித்து வரும் நிலையில் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் காயத்திலிருந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் ரசிகர்களுக்காக கேப்டன் பதவியை விட்டுவிட்டு ஒரு சீசன் விளையாடினார். இருப்பினும் கடைசி தோனி காயத்தால் தடுமாறினார்.
இருப்பினும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி கலந்து கொள்வது குறித்து சென்னை அணியின் நிறுவனர் ஸ்ரீனிவாசனிடம் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது கிரிக்பஸ்ஸில் வெளிவந்துள்ள தகவலின் படி 2018ஆம் ஆண்டு போல ஒரு அணி ஐந்து அல்லது ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற சலுகையை ஐபிஎல் நிர்வாகம் வழங்கினால் மட்டுமே தோனி அடுத்த சீசனில் விளையாடுவார்.
ஆனால் 2022ஆம் ஆண்டிலிருந்து தக்கவைப்பு வீரர்களின் எண்ணிக்கையை 5 லிருந்து 4ஆக ஐபிஎல் நிர்வாகம் குறைத்துள்ளது. இந்த நிலையில் அடுத்த சீசனுக்கு எவ்வளவு வீரர்களை தக்க வைக்கலாம் என்ற இறுதி முடிவை ஐபிஎல் நிர்வாகம் விரைவில் வெளியிடும். இந்த சீசனிலும் ஐந்து அல்லது ஆறு வீரர்கள் தக்க வைக்க அனுமதி அளித்தால் மட்டுமே தோனி அடுத்த சீசனில் கலந்து கொள்வார். அப்படி இல்லை எனில் இதுவே அவரது இறுதி சீசன் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க:ஹசரங்கா நீங்க பும்ரா கிடையாது.. இந்தியா பேர கேட்டாலே இலங்கை அணி பயப்படுது – பாக் பசித் அலி பேட்டி
இதன் காரணமாகவே தோனி அடுத்த சீசனைக் கருத்தில் கொண்டு தனது கேப்டன் பதவியை இளம் வீரர் ருத்ராஜிடம் ஒப்படைத்தார். மேலும் ரிஷப் பண்ட் சென்னை அணியில் இணையவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் சென்னை அணியில் என்ன நடைபெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






