ஹசரங்கா நீங்க பும்ரா கிடையாது.. இந்தியா பேர கேட்டாலே இலங்கை அணி பயப்படுது – பாக் பசித் அலி பேட்டி

0
3685
Hasaranga

நேற்று இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில் அந்த அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் வனிந்து ஹசரங்காவை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் இரண்டு போட்டிகளிலும் ஹசரங்கா பந்துவீச்சு மற்றும் பேட்டிங் மிக சுமாராகவே இருந்தது. அதே சமயத்தில் அவர் களத்தில் நடந்து கொள்ளும் முறை எப்பொழுதும் விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே இருந்து வந்திருக்கிறது.

- Advertisement -

மேலும் கடந்த இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் அவர் பொறுப்பற்ற முறையில் விளையாடி டக் அவுட் ஆனார். அத்தோடு நேற்றைய போட்டியில் இரண்டு ஓவர்கள் பந்து வீசி 34 ரன்கள் கொடுத்தார். ஜெயஸ்வால் ஹசரங்கா பந்து வீச வந்தது முதல் தாக்குதல் பாணியில் ஆடி நொறுக்கி விட்டார். மேலும் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியின் மிடில் ஆர்டர் மற்றும் பினிஷிங் என மிக மோசமாக விளையாடினார்கள். கொத்து கொத்தாக விக்கெட் கொடுத்து தோற்று இருக்கிறார்கள்.

இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறும் பொழுது “நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் வனிந்து ஹசரங்கா கிரிக்கெட்டை விட பெரியவர் ஆகிவிட்டார் என்று நான் நினைக்கிறேன். தற்போது அவர் பெரியவராக கிரிக்கெட் சின்னதாகி விட்டது. பேட்டிங்கில் மிக மோசமான ஷாட் விளையாடி அவுட் ஆனார். மேலும் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் அவரை அடித்து நொறுக்கி விட்டார்கள்.

- Advertisement -

என்னை பொருத்தவரை ஆட்டநாயகன் விருது ஹசரங்காவுக்குத்தான் கொடுக்க வேண்டும். ஏனென்றால் ஆட்டநாயகன் விருதை அவருக்கு கொடுத்து மூன்றாவது போட்டியில் ஓய்வு எடுங்கள் என்று சொல்லிவிடலாம். அவர் சில்லி ஷாட்களை அடிக்கிறார். அவருடைய பந்துவீச்சும் அப்படியே இருக்கிறது. அவர் திடீரென பூம்பூம் பும்ரா ஆகிவிட்டார்.ஆனால் அவர் ரவி பிஸ்னாயிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : இந்திய அணி பாகிஸ்தான் வரணும்.. அப்ப இந்த விஷயம் புரியும்.. எங்க துணிச்சல் இருக்கா? – ஹர்பஜன் சிங்குக்கு தன்வீர் அகமத் சவால்

இலங்கையின் மிடில் ஆர்டர் பேட்டர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்தியாவின் ஆதிக்கம் இந்தியாவின் பெயரை கேட்டும் இலங்கை அணி பயப்படும் அளவுக்கு இருக்கிறது. இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி திடீர் சரிவுகளை சந்தித்து சுருண்டது.அவர்களுடைய மிடில் ஆர்டருக்கு எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்று தெரியுமா தெரியாதா? என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -