கில் பாவம்பா சின்ன பையன்.. இந்த 2 விஷயத்தை பண்ணி உதவி பண்ணுங்க.. ப்ளீஸ் திட்டாதீங்க – அசாருதீன் வேண்டுகோள்

0
29
Gill

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவரை இந்த நேரத்தில் எதுவும் விமர்சிக்க கூடாது என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குறைந்தபட்சம் டிரா செய்யக்கூடிய வாய்ப்பில் இருந்தும் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன் காரணமாக கேப்டன் பொறுப்புக்கு கில் தகுதியானவர் இல்லை என்கின்ற விமர்சனங்கள் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியை நீண்ட நாட்களாக கேப்டனாக இருந்து வழிநடத்திய அனுபவம் கொண்ட முகமது அசாருதீன் கில்லுக்கு ஆதரவு தந்திருக்கிறார்.

- Advertisement -

கில் மீதான விமர்சனம்

இந்திய அணி விளையாடிக் கொண்டிருக்கும்போது களத்தில் கேஎல்.ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா என பலரும் குறுக்கீடுகள் செய்வதாகவும், கில் தனிப்பட்ட முறையில் முடிவுகளை எடுப்பவராக இல்லை எனவும் இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் விமர்சனம் செய்திருந்தார்.

மேலும் தினேஷ் கார்த்திக் கூறிய இதே கருத்தை பேசி இருந்த நாசர் ஹுசைன் கில்லிடம் ஆளுமை பண்பை பார்க்க முடியவில்லை எனவும், இந்திய அணியில் ஒரே நேரத்தில் ஐந்து கேப்டன்கள் செயல்படுகிறார்கள் என்றும் விமர்சனம் செய்திருந்தார். இளம் வீரராக இது கில்லுக்கு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

இது நியாயம் கிடையாது

இது குறித்து முகமது அசாருதீன் பேசும் பொழுது “நாம் கில்லுக்கு நியாயமாக ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர் இப்பொழுதுதான் பொறுப்பேற்று இருக்கிறார். எனவே நாம் அவருக்கு நேரத்தையும் ஆதரவையும் கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில் அவரை குறை கூறி விமர்சனம் செய்ய முடியாது. கேப்டனாக ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார். இதை வைத்து அவரது கேப்டன்சி பற்றியும் கூற முடியாது”

இதையும் படிங்க : நாங்க டேல் ஸ்டெயினுக்கு செஞ்ச மாஸ்டர் பிளான.. இந்தியா பும்ராவுக்கு செய்யணும் – ஏபி டிவில்லியர்ஸ் கோரிக்கை

“முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் சரிவால் தோற்றது. ஆனால் இப்போது அவர்கள் சரியான வீரர்களை தேர்ந்தெடுத்து விளையாட வேண்டும். மேலும் பந்துவீச்சும் சரியாக இருக்க வேண்டும். அவர்கள் பெரிய அளவில் பும்ராவை சார்ந்து இருக்கிறார்கள். எனவே அனுபவம் வாய்ந்த குல்தீப் யாதவை அணியில் விளையாட வைக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -