நேற்று ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக அதிரடி சதம் அடித்து ஆட்டநாயகன் விருது வென்ற லக்னோ அணி வீரர் மிட்சல் மார்ஸ் உலகின் சிறந்த கிரிக்கெட் தொடர் ஐபிஎல்தான் என கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் மிட்சல் மார்ஸ் 64 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் எட்டு சித்தர்கள் உடன் அதிரடியாக 117 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது.
முக்கியமான போட்டியில் குஜராத் தோல்வி
இந்த போட்டியில் வென்றால் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கான முதல் தகுதிச் சுற்றில் விளையாட குஜராத் அணிக்கு வாய்ப்பு இருந்தது. எனவே குஜராத் தரப்பில் இந்த போட்டியில் மிகவும் முக்கியமானதாக அமைந்திருந்தது.
இந்த நிலையில் குஜராத் அணியின் டாப் ஆர்டர்கள் சாய் சுதர்சன் கேப்டன் பில் மற்றும் ஜோஸ் பட்லர் மூவருமே இந்த முறை முதல் பத்து ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்து விட்டார்கள். இதற்கு அடுத்து வந்த ரூதர்போர்டு மற்றும் ஷாருக்கான் இருவரும் போராடினாலும் கூட அந்த அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இறுதியாக 33 உடன் வித்தியாசத்தில் குஜராத் அணி தோல்வி அடைந்தது.
ஐபிஎல்தான் உலகில் சிறந்தது
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற மிட்சல் மார்ஸ் பேசும்பொழுது “ஐபிஎல் தொடரில் சில வருடங்கள் நான் விளையாட முடியாமல் போனது. நான் முதல் முதலில் டெக்கான் சார்ஜர்ஸ் அனிக்காக 2010 ஆம் ஆண்டு வந்தேன். இதற்கு நடுவில் எனக்கு முழுமையாக தொடக்கட்டக்காரராக விளையாடும் வாய்ப்பு இப்பொழுது கிடைத்திருக்கிறது. மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மார்க்ரம் உடன் எனக்கு நல்ல நட்பு உருவாகி இருக்கிறது”
இதையும் படிங்க : வெறும் 88 ஓவர்.. 498 ரன்.. 3 அதிரடி சதங்கள்.. ஜோ ரூட் சரித்திர சாதனை.. இங்கிலாந்து மிரட்டலில் ஜிம்பாப்வே அணி பரிதாபம்
“பவர் பிளவில் குஜராத் சிறப்பாக பந்து வீசியது. நான் 12 பந்துகளில் 12 ரன்கள் பிளேவில் எடுக்கும் பொழுது அது பீதி அடையக்கூடிய விஷயமாக மாறிவிடுகிறது. ஆனால் எங்களுக்கு நடுவில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது. அது விஷயங்களை எளிதானதாக மாற்றியது. ஆனாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாதது வருத்தம் அளிக்கிறது. கையில் இருந்த சில போட்டிகளை நாங்கள் தோற்று விட்டோம். ஆனால் ஐபிஎல் தொடரில் எந்த அணியையும் எந்த அணியும் தோற்கடிக்கும். இதன் காரணமாகத்தான் உலகின் சிறந்த கிரிக்கெட் தொடராக ஐபிஎல் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.