ஐபிஎல் 2025.. ஆர்சிபி கோப்பையை வெல்ல, எப்படியாச்சும் மும்பையை நிறுத்தியே ஆகனும்.. இல்லனா அவ்வளவு தான்.. அஸ்வின் வார்னிங்

0
48

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் மும்பை அணி இறுதிப் போட்டிக்கு வரவே கூடாது என்று சிஎஸ்கே வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடப்பு சீசனில் விளையாடிய அஸ்வின் தற்போது பிளே ஆப் குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

முதல் குவாலிபயரில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று எலிமினேட்டர் போட்டியில் குஜராத்தும் மும்பை அணியும் பல பரிட்சை நடத்த உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின், ஆர்சிபி அணி இம்முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் எலிமினேட்டர் போட்டியில் மும்பைக்கு எதிராக குஜராத் வெற்றி பெற வேண்டும்.

- Advertisement -

ஆர்சிபி பிரார்த்தனை செய்யும்:

மும்பை அணியை இறுதி போட்டிக்குள் யாரும் உள்ள வரவே விடக்கூடாது. எவ்வளவு விலை கொடுத்தாலும் அவர்களை தடுத்து நிறுத்தி விட வேண்டும். ஆர் சி பி அணி மும்பை மட்டும் இறுதிப் போட்டிக்கு வந்து விடக்கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டு இருப்பார்கள்.

ஆர்சிபி அணி இம்முறை கோப்பையை வெல்வது போல் தோன்றுகிறது. ஆனால் கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நான் ஒரு ஆர் சி பி ரசிகனாக இருந்தால் நிச்சயம் நான் குஜராத்தை தான் இறுதிப் போட்டியில் எதிர்கொள்ள ஆசைப்படுவேன். விராட் கோலியிடம் இதை சொல்லியே ஆக வேண்டும்.

- Advertisement -

கோலி கோப்பையை வெல்வார்:

இந்த ஆண்டு ஆர் சி பி தான் கோப்பையை வெல்லும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் கோலியிடம் ஐசிசி பட்டம் இல்லை என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் கேப்டனாக இல்லை என்றாலும் தற்போது இரண்டு கோப்பையை அவர் வென்று விட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் கேப்டனாக கோலி இருந்தார்.

இதையும் படிங்க: இங்கிலாந்து ‘ஏ’க்கு எதிரான 4 நாள் கொண்ட டெஸ்ட்.. இந்தியா ‘ஏ’ அணி கேப்டன் சொதப்பல்.. யாருக்கு எல்லாம் வாய்ப்பு?

இதனால் ஆர் சி பி அணி 18 ஆண்டுகளில் முதல் ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி சேஸிங் செய்வது என்றால் அந்த சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்று கோலிக்கு நன்றாகவே தெரியும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -