நாளை மறுநாள் துவங்க இருக்கும் ஆசிய கோப்பை டி20 தொடருக்கு இந்திய அணியில் இடம்பெறப் போவது சஞ்சு சாம்சனா இல்லை ஜிதேஷ் சர்மாவா? இன்று நேற்று பயிற்சியில் முடிவாகி இருப்பதாக செய்திகள் கூறுகிறது.
தற்போது இந்திய டி20 அணிக்கு துணை கேப்டனாக சுப்மன் கில் கொண்டுவரப்பட்டு இருப்பதால் தொடக்க ஆட்டக்காரராக அவர் விளையாடுவது உறுதியாகிவிட்டது. எனவே சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
தற்போது சஞ்சு சாம்சன் விளையாட வேண்டுமென்றால் நேரடியாக கீழ் வரிசையில் ஜிதேஷ் சர்மா இடத்தில் விளையாட வேண்டும். இல்லையென்றால் மூன்றாவது இடத்தில் திலக் வர்மா இடத்தில் விளையாட வேண்டும். ஆனால் அவர் கீழ் வரிசையில் விளையாடுவது பழக்கம் இல்லை என்பதால் மேல் வரிசையில் விளையாடத்தான் வாய்ப்புகள் அதிகம்.
அதே சமயத்தில் பகுதி நேர ஆப் பின்னர் ஆக திலக் வர்மாவை வைத்துக் கொண்டு, ஜிதேஷ் சர்மா கீழே விளையாடக்கூடியவர் என்பதால் அவரை விளையாட வைப்பது கம்பீருக்கு மிகவும் எளிதானதாக இருக்கும். இந்த நிலையில் இருவரில் யார் விளையாடுவார்கள் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
நேற்று இந்திய அணி தனது முதல் நாள் பயிற்சியை துவங்கி இருந்தது. இதில் முதலில் ஜித்தேஷ் சர்மா த்ரோ டவுன்களை எதிர்கொண்டு சாதாரணமாக பேட்டிங் பயிற்சியை செய்தார். அந்தப் பக்கத்தில் சஞ்சு சாம்சன் பெரிய பயிற்சிகள் எதிலும் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் ஐயரை சிறப்பாக கவனித்த பிசிசிஐ.. முடிவுக்கு வந்த கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை – என்ன நடக்கிறது?
இதற்கு அடுத்து காலில் பேடு கட்டிக்கொண்டு ஜிதேஷ் சர்மா முழுமையான பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அவர் பங்கெடுத்த முழு பேட்டிங் பயிற்சியும் கம்பீரின் கண்காணிப்பில் நடைபெற்றது. இதன் மூலம் முதலில் ஜிதேஷ் ஷர்மாவை விளையாட வைக்க கம்பீர் முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.