அடுத்த மாதம் துவங்க இருக்கும் ஆசிய கோப்பை இந்திய அணிகள் என்ன மாதிரியான வீரர்கள் வேண்டும் என்பதில் கம்பீர் சில நிபந்தனைகளை வைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
ஆசியாவைச் சேர்ந்த எட்டு நாடுகள் விளையாடும் ஆசிய கோப்பைத்தொடர் டி20 கிரிக்கெட் வடிவத்தில் அடுத்த மாதம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் யுனைடெட் அரபு எமிரேட்டில் துவங்க இருக்கிறது. தற்போது ஆசிய சாம்பியனாக இந்திய அணி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பீர் நிபந்தனை
தற்போது கம்பீர் உருவாக்கி இருக்கும் இந்திய டி20 அணியில் முதல் ஐந்து இடங்கள் மிக வலிமையாக இருக்கிறது. இதில் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இடங்கள் சில நேரங்களில் சந்தேகத்திற்கு இடமாகவோ இருக்கிறது. இருந்த போதும் தேர்வாளர் ஒருவர் உறுதியாக முதல் ஐந்து இடங்களில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் கம்பீர் முதல் ஐந்து இடங்கள் தாண்டி ஒரு டைமென்ஷன் வீரர்கள் வேண்டாம் என்று கேட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது பேட்டிங் மட்டுமே செய்யக்கூடிய வீரர்கள் தனக்கு வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். முதல் ஐந்து இடங்களை தாண்டி அவர் அதிக ஆல்ரவுண்டர்களை விரும்புகிறார் என்று கூறப்படுகிறது.
பாதிக்கப்படும் வீரர்
இதன் காரணமாக கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களாக பெரிய அளவில் சிறப்பாக பேட்டிங் செய்யாத ரிங்கு சிங் இடம் பறிபோக வாய்ப்பிருப்பதாக தேர்வாளர் கூறியிருக்கிறார். இப்படியே வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அடுத்த தோனி என கூறப்பட்டவர். தற்போது அவர் சிறப்பாக செயல்படாத காரணத்தினாலும், கம்பீர் அதிக ஆல்ரவுண்டர்களை விரும்புவதாலும் இடம் கேள்விக்குறியாக இருக்கிறது.
இதையும் படிங்க : அர்த்தம் புரியாம பும்ராவை விமர்சனம் செய்ய வேண்டாம்.. பணிச்சுமை என்றால் இதுதான் – ஹர்பஜன்சிங் விளக்கம்
மேலும் இந்திய தேர்வாளர் ஒருவர் பேசும் பொழுது தற்போது முதல் ஐந்து இடங்கள் பழைய வீரர்களுக்கு கொடுக்கப்படும் எனவும், இதில் கில் மற்றும் ஜெய்ஸ்வால் என யார் பெயரையும் பரிசீலிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறார். ஒருவேளை ரிங்கு சிங் தேர்வு செய்யப்படவில்லை என்றால் ரியான் பராக் வாய்ப்பு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.






