இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சிறப்பாக செயல்பட்டு தொடரை டிரா செய்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து தொடர்
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்து வெளியேறினார். அதற்குப் பிறகு ஐபிஎல் தொடரில் காயம் குணமடைந்து மீண்டும் விளையாட ஆரம்பித்தார். இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பும்ரா பணிச்சுமை மேலாண்மை காரணமாக சில போட்டிகளில் மட்டும் விளையாடினார்.
இந்த சூழ்நிலையில் முகமது சிராஜ் இந்த டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளிலும் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்த நிலையில் பும்ரா மீது முழு டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை என்கிற ரீதியில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில் ஹர்பஜன் சிங் அது குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
பணிச்சுமை என்றால் இதுதான்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அவர் வலியால் எவ்வளவு அவதிப்படுகிறார் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் அவர் மிகவும் நேர்மையான மனிதர் என்று நன்றாக தெரியும். அவரது உடல் அவருக்கு எந்த அளவிற்கு தாங்கும் எந்த அளவிற்கு தாங்காது என்று தெரியும். அவர் இப்போதுதான் காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்து மீண்டும் திரும்பி வந்திருக்கிறார். பலர் பணிச்சுமை என்றால் என்ன என்று கேட்கிறார்கள். பும்ரா போன்ற ஒரு பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவில் செய்தது போல் தனியாக பந்து வீசும் போது அது பணிச்சுமை என்று பொருள்.
இதையும் படிங்க:தெ.ஆ டி20 ODI தொடர்.. இங்கிலாந்து அணி அறிவிப்பு.. சிஎஸ்கே வீரருக்கு சோகம்.. ஆர்சிபி வீரருக்கு அதிர்ஷ்டம்
அதுதான் பணிச்சுமை என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அவர் மற்றவர்களின் சுமையையும் சேர்த்து சுமக்கிறார். சிராஜ் சமீபத்தில் சிறப்பாக செய்தார், ஆனால் வருடம் முழுவதும் அவரால் இதை செய்ய முடியாது. கூடுதல் முயற்சி எடுத்து உடலை குறைக்க வேண்டிய ஒரு தொடர் வரலாம். பும்ரா ஆஸ்திரேலியாவில் அதைச் செய்தார் இறுதியில் உடைந்து போனார். ஆனால் சிராஜ் உடைந்து போக மாட்டார் என்று நம்பலாம். இந்த விஷயத்தில் வீரர்களின் நேர்மை மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்” என அவர் பேசி இருக்கிறார்.






