பும்ரா சாம்பியன்ஸ் டிராபி ஆடுவாரா?.. அந்த விஷயம் மட்டும் அதிசயம் – பிசிசிஐ தரப்பில் வெளியான தகவல்கள்

0
97
Bumrah

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அடுத்த மாதம் பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு காயம் சரியாகி வருவாரா? என்பது குறித்து புதிய செய்திகள் பிசிசிஐ தரப்பில் வெளியாகியிருக்கிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டியில் பும்ரா காயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து உடனடியாக அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பும்ரா சேர்க்கப்படவில்லை.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி

அதே சமயத்தில் சாம்பியன்ஸ் டிராபிக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது.

மேலும் சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் பும்ராவுக்கு மாற்று வீரராகவே அர்ஸ்தீப் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். மேலும் உம்ரா காயம் குறித்து தங்களுக்கு வெளிப்படையாக எதுவும் தெரியாது எனவும் அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

காயம் சரியாகி இருந்தால் அதிசயம்

இது குறித்து பிசிசிஐ தரப்பில் வெளியான செய்தியில் “பிசிசிஐ மருத்துவக் குழு நியூசிலாந்தில் இருக்கும் ஸ்கவுட்டன் உடன் தொடர்பில் இருந்து வருகிறது. பும்ராவை நியூசிலாந்துக்கு அனுப்ப திட்டமிட்டது அப்படியே பாதியில் நிற்கிறது. கொடுக்கப்பட்ட நேரத்தில் பும்ரா காயம் இல்லாமல் 100% உடல் தகுதியுடன் இருந்தால் அது அதிசயம்”

இதையும் படிங்க : 34 வருடம் .. வெஸ்ட் இண்டீஸ் புதிய சரித்திரம்.. பாகிஸ்தான் சொந்த மண்ணில் தோல்வி.. 2வது டெஸ்ட்

“தற்போது அவர் காயத்தின் நிலைமை குறித்து உடனுக்குடன் நியூசிலாந்தில் இருக்கும் அவரது மருத்துவக் குழுவுடன் பகிர்ந்து கொள்ளப்படும். அவரை நியூசிலாந்துக்கு அனுப்புவது தேவைப்பட்டால் மட்டுமே நடக்கும். இந்திய அணி நிர்வாகமும் பும்ரா நீண்ட காலத்திற்கு இந்திய அணிக்கு தேவை என்பதால் அவரை சீக்கிரத்தில் விளையாட வைக்க நினைக்கவில்லை. அவர் முழு உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே அது தேர்வாளர்களுக்கு தெரிவிக்கப்படும். தேர்வாளர்கள் பும்ரா விஷயத்தில் ஒரு மாற்றுத் திட்டத்தை வைத்திருக்க வேண்டும்” என கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -