3-0 ரோகித் அணி இத செஞ்சே ஆகணும்.. இல்லன்னா பைனல் போக அந்த 3 டீமால இந்தியாவுக்கு பிரச்சனை.. விரிவான விளக்கம்

0
57

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. பெங்களூரில் இன்று தொடர்ந்து பெய்து வரும் மழையால் போட்டி தொடங்குவதில் சற்று சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற இந்தத் தொடர் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

மூன்றாவது முறை இந்தியாவுக்கு வாய்ப்பு

கடந்த இரண்டு முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி முதல்முறை நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், இரண்டாவது முறை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் தோல்வி அடைந்து கோப்பையை வெற்றி பெரும் வாய்ப்பை இழந்தது. இந்த சூழ்நிலையில் திரும்பவும் போராடி வெற்றிகளை பெற்று வரும் நிலையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் 74.24 சதவீதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 62.50 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு தற்போது மொத்தமாக எட்டு டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அதில் மூன்று போட்டிகள் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், 5 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் இருக்கிறது. இதில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் இந்திய அணிக்கு சில சாதகமான அம்சங்கள் இருக்கின்றன.

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரேஸில் உள்ள அணிகள்

இந்த தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஐந்து போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் இந்திய அணிக்கு பெரிய சிக்கல் இருக்காது. ஏனென்றால் அதற்குப் பிறகு இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று பெருவதால் அந்த இரண்டு அணிகளும் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரேசில் இருக்கின்றன.

இதையும் படிங்க:ரோஹித் விராட் ஆடுவதை விட.. அவர் இருந்தாதான் டெஸ்ட் கிரிக்கெட் உண்மையா இருக்கும் – பேட் கம்மின்ஸ் கருத்து

ஒருவேளை இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை முழுவதுமாக கைப்பற்றாத நிலையில் இந்த எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஏதேனும் இரண்டில் தோல்வி அடையும் பட்சத்தில் அதற்கு மேல் ஏற்படும் ஒரு தோல்வி கூட இந்திய அணிக்கு பாதகமாக முடிய வாய்ப்பு இருக்கிறது. எனவே சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரை வெற்றி பெறுவது இந்திய அணி பாதுகாப்பான நிலையை அடையஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனவே ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இதை செய்யுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -