இந்திய கிரிக்கெட் அணி வருகிற நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மிக தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் கடந்த தொடர்களில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய இந்திய வீரர் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
திட்டம் தீட்டும் ஆஸ்திரேலியா
கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த முறை நிச்சயமாக இந்திய அணியிடமிருந்து கோப்பையை பறிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா வீரர்கள் கங்கணம் கட்டி வருகின்றனர். இதற்காக இந்திய அணிக்கு எதிராக பல திட்டங்களையும் தீட்டி வருகிறார்கள். ஆனால் கடந்த இரண்டு முறையும் இந்திய பேட்ஸ்மேனான புஜாராவின் பங்களிப்பு என்பது நிராகரிக்க முடியாத வகையில் அமைந்திருக்கிறது.
2018-2019ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் புஜாரா சிறப்பாக விளையாடி மூன்று சதங்கள் மற்றும் ஒரு அரை சதத்துடன் 521 ரன்கள் குவித்திருக்கிறார். அதேபோல கடந்த 2021/2022ஆம் ஆண்டில் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை என்றாலும் முக்கியமான கட்டத்தில் அவர் அடித்த மூன்று அரை சதங்கள் இந்திய அணி தோல்வியில் இருந்து வெளியேற முக்கிய காரணமாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் புஜாரா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
அவர் ஒரு சிறந்த டெஸ்ட் வீரர்
இதுகுறித்து அவர் கூறும் போது “புஜாராவுக்கு எதிராக விளையாடுவது என்பது எப்போதும் சிறப்பாக இருக்கும். ஆட்டத்தை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காத வீரர்களில் அவர் ஒருவர். பேட்டிங்கை மட்டுமே முழுவதுமாக செய்து கொண்டிருக்க கூடிய சிறப்பான வீரர். அவருக்கு எதிராக விளையாடும் போட்டியை நான் மிகவும் ரசிப்பேன். சில நாட்களில் அவர் வெல்வார், சில நாட்களில் நான் வெல்வேன். அவர் தற்போது இல்லாதது கொஞ்சம் வித்தியாசமான உணர்வாக இருக்கும். அவர் ஒரு சிறந்த வீரர் பல வருடங்களாக நான் அவருக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியுள்ளேன்.
இதையும் படிங்க:நான் ரஞ்சி சீசன்ல நல்லா ஆடுனா.. பிசிசிஐ எனக்கு இத செஞ்சு தரேன்னு வாக்கு கொடுத்துருக்கு – சஞ்சு சாம்சன் பேட்டி
அதுதான் உண்மையான டெஸ்ட் கிரிக்கெட். அவர் குறைவான ரன்களை அடித்திருக்கலாம், ஆனால் அவர் விளையாடும்போது எப்போதும் வாய்ப்பை பெறுகிற தருணமாக இருக்கும்.அவர் இல்லாமல் விளையாடுவது அவமானகரமாக இருக்கும். ஆனால் அதே சமயம் அவர் இல்லாமல் அவரது இடத்தை நிரப்ப வேறு ஒருவரை இந்தியா தேர்ந்தெடுக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.