இந்தியாவில் ஆசிய கோப்பை 2025.. கோலி ரோகித் ஆட முடியாது.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

0
935

2023ம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரை இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து 2025ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரை இந்திய அணி நடத்துவதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆசிய கோப்பை அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஆசிய அணிகளில் சாம்பியன் அணியை நிர்ணயிக்கப் போகும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கிறது. 1990ம் ஆண்டுக்கு பிறகு தீபகற்பத்தில் நடத்தப்படும் தொடராக இது அமைந்திருக்கிறது. கடந்த சனிக்கிழமை அன்று இந்தியா ஆசிய கோப்பை தொடரை நடத்த ஆர்வமாக இருப்பதற்கான அழைப்பிதழை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது.

மேலும் இந்த ஆண்டுக்குள் ஆசிய கோப்பை தொடரை நடத்த எந்த அணி வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெறும் நிலையில் ஆறாவது அணியை தகுதி சுற்று வைத்து இறுதியாக தீர்மானிக்கப்படும். மொத்தம் ஆறு அணிகள் இந்த ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கின்றன.

- Advertisement -

இந்த தொடரானது தற்போது டி20 வடிவத்தில் நடத்தப்பட உள்ளது. ஏனென்றால் 2026ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருப்பதால் அதனை கருத்தில் கொண்டு இது தற்போதைய டி20 வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் 2027ஆம் ஆண்டு இது மீண்டும் ஒரு நாள் வடிவத்திற்கு மாறும். ஏனெனில் 2027ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஒரு நாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.

இந்த தொடரானது டி20 வடிவத்தில் நடைபெற உள்ளதால் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏனென்றால் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையோடு இவர்கள் இருவரும் தங்களது ஓய்வினை அறிவித்து இருக்கின்றனர். கடைசியாக 2016ஆம் ஆண்டு துணைக்கண்டத்தில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றது.

இதையும் படிங்க:அவரா கிளம்பல.. பாண்டிங்கை கோச் பதவியிலிருந்து தூக்க இது ஒன்னு தான் காரணம் – டெல்லி கேபிடல்ஸ் ஓனர் பேட்டி

மேலும் ஆவணத்தில் வெளிவந்துள்ள அறிக்கையின் படி ஆசிய கோப்பை தொடர்பான அட்டவணைகள், தேதிகள் மற்றும் ஆடுகளங்கள் உள்ளிட்ட விபரங்கள் யாவும் தற்காலிகமாகவே அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால் இதன் விபரங்கள் எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. கடைசியாக 2023ஆம் ஆண்டு இந்திய அணி ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தது.

- Advertisement -