இந்திய அணிக்கு 2 கோச்.. முடிவு செய்யும் ஸ்டோக்ஸ்.. கம்பீருக்கு காத்திருக்கும் செக் – கள நிலவரம் என்ன?

0
482
Gambhir

இந்திய அணிக்கு இரண்டு பயிற்சியாளர்களை கொண்டு வருவதற்கான தேவை உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் கம்பீருக்கு மிகப்பெரிய சோதனை களமாக இருக்கும் எனவும் செய்திகள் கூறுகிறது.

தற்போது மூன்று வடிவ இந்திய அணிக்கும் கம்பீர் தலைமை பயிற்சியாளராக தொடர்கிறார். இந்திய கிரிக்கெட்டில் வெவ்வேறு வடிவங்களுக்கு வெவ்வேறு பயிற்சியாளர்களை வைத்துக் கொள்ளும் பழக்கம் கிடையாது. இதற்கு முன்பாக இங்கிலாந்து அணியில் அப்படி இருந்தது. இப்போது இங்கிலாந்து அணியும் ஒரே பயிற்சியாளர் இடத்திற்கு வந்திருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே உருவான பேச்சு வார்த்தை

இந்திய அணி உள்நாட்டை பொறுத்தவரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய அசைக்க முடியாத அணியாக 12 ஆண்டுகளாக இருந்து வந்தது. அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் இருக்கும் வரையில் இந்திய அணி உள்நாட்டில் டெஸ்ட் தொடரை தோற்பதற்கான வாய்ப்பே இல்லை என பலரும் கூறி வந்தார்கள்.

இப்படியான நிலையில்தான் கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இந்திய அணி இழந்தது. மேலும் இதில் ஒரு போட்டியை கூட இந்திய அணி வெல்லவில்லை. இத்துடன் இந்தத் தொடரில் தோல்வி அடைந்தது தான் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாததற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் கம்பீரை வெள்ளை பந்து இந்திய அணிகளுக்கு மட்டும் பயிற்சியாளராக வைக்கலாம் என்ற பேச்சு எழுந்திருந்தது.

- Advertisement -

முடிவு செய்யும் பென் ஸ்டோக்ஸ்

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் அனுபவம் இல்லாத இந்திய இளம் அணி 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. குறைந்தபட்சம் இந்திய அணி இரண்டு போட்டிகளையாவது வெல்ல வேண்டும். அப்பொழுதுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு வாய்ப்புகள் பலமாக இருக்கும்.

இதையும் படிங்க: விராட் ரோஹித் இல்லாதது அவமானமான விஷயம்.. ஆனா இந்திய பசங்களும் அதுல சாதாரணம் கிடையாது – வோக்ஸ் பேட்டி

ஒருவேளை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்தது போல இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் நடந்தால் அது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக மாறும். இது நடந்தால் கம்பீரை வெள்ளைப் பந்து அணிகளுக்கு பயிற்சியாளராக தொடர வைத்து, இந்திய டெஸ்ட் அணிக்கு லக்ஷ்மணனை பயிற்சியாளராக கொண்டுவர வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக செய்திகள் கூறுகிறது. கம்பீர் அணுகுமுறை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிவராது என்கின்ற கருத்து பரவலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இதை முடிவு செய்யும் இடத்தில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இருக்கிறது!

- Advertisement -