விராட் ரோஹித் இல்லாதது அவமானமான விஷயம்.. ஆனா இந்திய பசங்களும் அதுல சாதாரணம் கிடையாது – வோக்ஸ் பேட்டி

0
291
Woakes

தற்போது இந்திய டெஸ்ட் அணியில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இல்லாதது அவமானகரமான விஷயம் என இங்கிலாந்து வேகபந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் கூறியிருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் பெயர் இடம் பெற்று இருக்கிறது. மேலும் இவர் தற்போது இந்திய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ஏ அணிகள் விளையாடி வரும் இவர் 3 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணிக்கு பெரிய சவால்

தற்போது இங்கிலாந்து அணி வெளியிட்டிருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களான ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன் மற்றும் மார்க் வுட் என நட்சத்திர வீரர்கள் யாருமே இடம் பெறவில்லை. மூவருமே காயத்தின் காரணமாக அணியை விட்டு வெளியில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்திய அணிக்கு முதல் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ் அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனுபவம் மற்றும் பந்துவீச்சில் கட்டுப்பாடு துல்லியம், ஸ்விங் என மிகவும் ஒழுக்கமான பந்துவீச்சாளர் என்பதோடு ஆல்ரவுண்டர் என்பதால் இந்திய அணிக்கு பிரச்சனைகள் இவரால் காத்திருக்கிறது. இந்த நிலையில் இவர் இந்திய அணி குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

விராட் ரோஹித் இல்லாதது…

இதுகுறித்து கிறிஸ் வோக்ஸ் கூறும்பொழுது “விளையாட்டை பொருத்தவரையில் எங்களுக்கு பல வருடங்களாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுடன் நல்ல சண்டைகள் இருந்திருக்கிறது. தற்போது அவர்கள் இந்திய அணியில் இருக்க மாட்டார்கள் என்பது அவமானமான விஷயம். இருந்தபோதிலும் இந்திய கிரிக்கெட்டில் நிறைய இளம் திறமைகள் இருக்கிறார்கள். அவர்கள் ஏதாவது ஒரு வகையில் உயர்ந்த தரத்தில் தங்களை நிரூபிக்க கூடிய அளவுக்கு இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்”

இதையும் படிங்க : இங்கிலாந்த நான் ஜெயிக்காததா.. இந்திய பேட்டிங் ஆர்டர் இப்படி இருந்தா மாஸ் காட்டலாம் – ரிக்கி பாண்டிங் அறிவுரை

“எந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது என்றாலும் அது கடினமானதாகத்தான் இருக்கும். இந்தியா பேட்ஸ்மேன்கள் எப்பொழுதும் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். எனவே எங்களுக்கு சவாலாகத்தான் இருக்கும். மேலும் கே.எல். ராகுல் தற்போது இங்கிலாந்து ஏ அணிக்கு எதிராக சதம் அடித்திருக்கிறார். இந்த ஆடுகளத்தில் பந்து வீச்சுக்கு சாதகம் நாள் முழுவதும் இருந்தது. இந்த நிலையில் அவருடைய சதம் சிறப்பானது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -