தற்போது இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வீரர்கள் மோசமாக செயல்படுவதின் காரணமாக, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் புதிய வீரர்களை உள்ளே கொண்டு வரலாம் என செய்திகள் தெரிவிக்கிறது.
இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கடந்த வருடத்தில் தோற்ற பிறகு, இந்த முறை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் சொந்த மண்ணில் தோற்று அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
கட்டப்பட்ட அகர்கர் கைகள்
தற்போது இந்திய டெஸ்ட் அணி சொந்த மண்ணில் தோல்வி அடைந்த காரணத்தினால் கம்பீர் மீது மட்டும் இல்லாமல் தேர்வுக் குழு தலைவர் அகர்கர் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இருவரும் சேர்ந்து இந்திய டெஸ்ட் அணியை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள் என்று ரசிகர்கள் கடுமையான குற்றச்சாட்டைஇருவரும் சேர்ந்து இந்திய டெஸ்ட் அணியை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள் என்று ரசிகர்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் கில் இருவருக்கும் வித்தியாசமான விருப்பங்கள் இருப்பதாகவும், அவர்களின் முடிவின் அடிப்படையிலேயே வீரர்களின் தேர்வும் நடப்பதாகவும், இந்த விஷயத்தில் அகர்கர் கைகள் கட்டப்பட்டு இருப்பதாக முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் பெயர் வெளியிடாமல் தெரிவித்திருக்கிறார்.
புதிய ஐந்து வீரர்கள்
தற்போது நிலைமை கைமீறி சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால் அஜித் அகர்கர் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிதாக ஐந்து வீரர்களை பரிசீலிக்க முடிவு செய்து இருக்கிறார் என்றும் செய்திகள் கூறுகிறது. இத்துடன் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு கொண்டு வரப்படுவார் என்றும் தெரிகிறது.
இதையும் படிங்க : இத சொல்றதுக்கு நான் வெட்கப்பட மாட்டேன்.. நீங்க எல்லாரும் மன்னிச்சிடுங்க – கேப்டன் ரிஷப் பண்ட் அறிக்கை
இந்த வகையில் ருதுராஜ், ரிங்கு சிங், ரஜத் படிதார், சர்பராஸ் கான் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் படிப்படியாக விளையாடுவதற்கான வாய்ப்புகளை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. தற்போது இவர்கள் அனைவருமே ரஞ்சி தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






