இந்திய கிரிக்கெட்

பும்ரா ஃபிட்டா இருக்கார்.. ஆனா அவர் ரூல்டு அவுட் ஆக காரணம் இவர்தான் – பிசிசிஐ தரப்பில் வெளியான தகவல்கள்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இருந்து உடல் தகுதி இல்லாத காரணத்தினால் பும்ரா ரூல்டு அவுட் ஆகியிருக்கிறார். ஆனால் அவர் உடல் தகுதியுடன் இருந்தார் குறிப்பிட்ட ஒருவர் அவரை தேர்வு செய்ய விரும்பவில்லை என தற்போது பிசிசிஐ தரப்பில் இருந்து சில செய்திகள் கசிந்து இருக்கிறது.

- Advertisement -

நேற்று இரவு சாம்பியன்ஸ் டிராபி இறுதி செய்யப்பட்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் மிக முக்கியமான மூன்று விஷயங்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இன்று பும்ரா உடல் தகுதியுடன் தேர்வு செய்யப்படவில்லை என்ற செய்தி கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை

பும்ரா விளையாடாத காரணத்தினால் அவருடைய இடத்திற்கு ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் ஜெய்ஸ்வாலை நீக்கிவிட்டு வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்திருக்கிறார்கள். முகமது சிராஜை தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை மீண்டும் புறக்கணித்திருக்கிறார்கள்.

தற்போது பிசிசிஐ தரப்பில் கசிந்து இருக்கும் செய்தியில் ” தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் நிதின் பட்டேல் பும்ராவின் உடல் தகுதி பற்றி அனுப்பிய அறிக்கையில் அவருடைய மறுவாழ்வு மற்றும் ஸ்கேன் விவரங்கள் நல்லபடியாகவே இருப்பதாக தெரிகிறது. ஆனால் போட்டி நேரத்தில் அவர் பந்து வீசும் தகுதியுடன் இருப்பாரா? என்று தெரியாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இதன் காரணமாக இந்திய தேர்வுக்குழு ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை”

- Advertisement -

அகர்கர் பக்கம் வந்த பந்து

“தற்பொழுது நிதியின் பட்டேல் பந்தை அகர்கர் பக்கம் விட்டு விட்டார். அவர்கள் ஓரளவுக்கு உடல் தகுதி இல்லாத ஒரு வீரரை தேர்வு செய்யும் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவக் குழு முழுமையான கிரீன் லைட்டை காட்டாத பொழுது தேர்வுக்குழு மட்டும் எப்படி தேர்வு செய்ய முடியும்?”

இதையும் படிங்க : என்ன ஆச்சு ஆஸி அணிக்கு.? மேலும் ஒரு ஸ்டார் பவுலர் விலகல்.. 12 வருட சோகமான வரலாறை உடைக்குமா ஸ்மித் கூட்டணி.?

“பும்ராவை தேர்வு செய்து அவர் போட்டியின் போது முழுமையாக காயமடைந்து இருந்தால் அது மிகவும் சங்கடமானதாக மாறி இருக்கும். ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு இப்படியான ஒரு சம்பவம் அவருக்கு நடைபெற்றது. அப்பொழுது சேத்தன் சர்மா தேர்வுக்குழு தலைவராக இருந்தார். அதற்குப் பிறகு ஒரு வருடம் கழித்து பும்ரா திரும்பி வந்தார். தற்பொழுது அகர்கர் இந்த தவறை செய்ய விரும்பவில்லை” என்று கூறப்பட்டிருக்கிறது

- Advertisement -
Published by