இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவிற்கும் தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கும் இடையில், 2026 டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை அமைப்பதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இவர்கள் இருவருக்குமே தனிப்பட்ட முறையில் வீரர்களை சேர்ப்பதற்கான திட்டங்கள் இருப்பதாகவும், இந்திய டி20 அணியை அமைப்பதில் அனைவரும் ஒரே பக்கத்தில் இல்லை எனவும், இதனால் தற்போது குழப்பம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கம்பீர் அகர்கர் திட்டம்
தற்போது இந்திய டி20 அணி ஆசியக் கோப்பை தொடரில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய டி20 செட்டப்பில் கில்லை உள்ளே கொண்டு வரவும், அவருக்கு துணை கேப்டன் பதவி தரவும் வேலைகள் நடப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு கம்பீர் மற்றும் அகர்கர் இருவரும் முக்கியமான காரணமாக இருக்கிறார்கள் என்றும், அதே சமயத்தில் இந்திய டி20 அணியின் கேப்டன் கில்லை தனது அணியில் விரும்பவில்லை எனவும், காரணம் அவருடைய சர்வதேச டி20 செயல்பாடுகள் திருப்தியாக இல்லை எனவும் கூறப்படுகிறது.
சூரியகுமார் யாதவ் விருப்பம்
இந்த நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கில்லை கொண்டு வருவதற்கு பதிலாக ஜெய்ஸ்வாலை கொண்டு வர வேண்டும் என்று விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கிறது. ஜெயஸ்வால் அதிரடியாக விளையாடுவதுடன் இடதுகை ஆட்டக்காரர் ஆகவும் இருப்பதால் சூரிய குமாரின் தேர்வு அவராக இருக்கிறார்.
இதையும் படிங்க : தோனி என்னை டீம்ல இருந்து தூக்கிட்டார்.. அப்ப சச்சின் தந்த அட்வைஸ்தான் காப்பாத்துச்சு – சேவாக் பேட்டி
இதன் காரணமாக தற்போது கம்பீர் மற்றும் சூரியகுமார் யாதவ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இறுதியில் கம்பீர் மற்றும் அகர்கர் இருவரும் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நடக்கும் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது. இதன் அடிப்படையில் கில் இந்திய டி20 அணியில் இடம் பெறுவதோடு துணை கேப்டனாகவும் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






