தோனி என்னை டீம்ல இருந்து தூக்கிட்டார்.. அப்ப சச்சின் தந்த அட்வைஸ்தான் காப்பாத்துச்சு – சேவாக் பேட்டி

0
216
Dhoni

இந்திய ஒருநாள் அணியில் இருந்து தோனி தன்னை நீக்கிவிட்டதாகவும் அந்த நேரத்தில் சச்சின் தந்த அறிவுரை தன் கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டித்ததாகவும் வீரேந்தர் சேவாக் கூறியிருக்கிறார்.

உலக கிரிக்கெட்டில் முதல் பந்தில் இருந்து அடித்து விளையாடிய அதிரடியான துவக்கம் தரும் முறையை மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டியவராக வீரேந்திர சேவாக் இருக்கிறார். அதிரடியான பேட்டிங்கை வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதங்கள் அடித்த வீரராக இருக்கிறார்.

- Advertisement -

தோனி என்னை நீக்கி விட்டார்

இந்த நிலையில் 2007 மற்றும் 2008ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதில் தோனி துவக்க இடத்திற்கு மூன்று வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தினார். இதற்கு அப்போது சீனியர் வீரர்களிடம் எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக வீரேந்தர் சேவாக் இதை எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசி உள்ள வீரேந்தர் சேவாக் கூறும்பொழுது “2007 ஆம் ஆண்டு முத்தரப்பு தொடரில் நான் மூன்று போட்டிகள் விளையாடினேன். பிறகு என்னை தோனி தேர்வு செய்யாமல் விட்டுவிட்டார். மேலும் அதற்கடுத்த தொடர்களில் என்னை அணியில் இருந்தும் நீக்கிவிட்டார். நான் விளையாடும் அணியில் ஒரு அங்கமாக இருக்க முடியாவிட்டால் நான் ஓய்வு பெறுவதுதான் சரியாக இருக்கும்” என்று உணர்ந்தேன்.

- Advertisement -

சச்சின் தந்த அறிவுரை

” நான் சச்சினிடம் சென்று ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற நினைப்பதாக கூறினேன். ஆனால் அவர் அதற்கு தனக்கும் இப்படி 2000 ஆண்டில் ஒரு மனநிலை வந்ததாகவும். தான் அதை கடந்து வந்ததாகவும், எனவே உணர்ச்சி வசப்படும் பொழுது முடிவுகள் எடுக்க வேண்டாம் என்றும், ஒன்று இரண்டு தொடர்கள் விளையாடி பிறகு முடிவு எடுக்கலாம் என்றும் கூறினார். பிறகு நான் ஓய்வு முடிவை கைவிட்டேன்”

இதையும் படிங்க : பிசிசிஐ கில்லுக்கு தப்பு செய்ய கூடாது.. இந்த ரெண்டு பேர வச்சு ஸ்ட்ராங் பண்ணி தரணும் – சுரேஷ் ரெய்னா கோரிக்கை

“என் மகன் ஆர்யா தற்போது கிரிக்கெட் விளையாடி வருகிறார். நான் அவரிடம் அழுத்தத்தை எப்போதும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறி இருக்கிறேன். அழுத்தம் என்பது நாமாக எடுத்துக் கொள்ளக் கூடியதுதான். மேலும் அவர் ரஞ்சி மற்றும் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடுவார்” என்று நம்புகிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -