பிசிசிஐ மீது ரோகித் சர்மா அதிருப்தி.. டிராவிட் வழியில் செல்ல முடிவு.. திடீர் மாற்றங்கள்

0
168
Rohit

இந்திய அணி சில வாரங்களுக்கு முன்பாக வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடரை தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்று கைப்பற்றியது. தற்போது இதற்கு அறிவிக்கப்பட்ட மெகா பரிசு தொகை குறித்து நிறைய சர்ச்சை நிலவி வருகிறது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா இதில் முக்கிய முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

கிரிக்கெட் உலகில் எப்போதும் இல்லாத அளவுக்கு டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் 125 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அளித்தது. டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐசிசி கொடுத்த பரிசுத் தொகை 20.40 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. அதைவிட ஐந்து மடங்கு தொகையை இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் கொடுத்தது.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ஐந்து கோடி, துணை பயிற்சியாளர்களுக்கு தலா 2.5 கோடி, ரிசர்வ் வீரர்களாக சென்றவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாயையும் இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசுத்தொகையாக அறிவித்து ஆச்சரியப்படுத்தியது.

இந்த நிலையில் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் தன்னுடைய பயிற்சி குழுவுக்கு அளித்த 2.5 கோடி ரூபாய் தொகையை தனக்கும் போதும் எனவும், அவர்களை விட அதிகமாக தனக்கு மட்டும் வேண்டாம் எனவும் கூறி மறுத்திருந்தார். அவருடைய இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனக்கு வழங்கப்பட்ட 5 கோடி ரூபாய் பரிசுத் தொகையை தன்னுடைய அணியின் பயிற்சியாளர் குழுவுக்கு விட்டுத்தர இருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கிறது. ரோகித் சர்மா ராகுல் டிராவிட் வழியில் செல்ல முடிவெடுத்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 52 மாதங்கள்.. கம்பீருக்கு பிசிசிஐ கொடுத்த அசைன்மென்ட்.. உலக கோப்பையை தாண்டிய சவால்கள்.. சாதிப்பாரா?

அனைவருக்கும் அணியில் ஒரே மாதிரி பரிசுத் தொகையை பிசிசிஐ கொடுக்காதது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே அவர் இப்படியான முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. தற்பொழுது ரோகித் சர்மா முடிவும் சமூக வலைதளத்தில் பெரிய வைரலாக மாறி வருகிறது.