பும்ராவின் காயம் எப்படி ஆனது.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆடுவாரா? – வெளியான முக்கிய புதிய தகவல்கள்

0
776
Bumrah

இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா காயம் எந்த அளவிலானது? அவர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துபாயில் இந்திய அணி விளையாட இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா? என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பும்ரா காயமடைந்து திடீரென வெளியேறினார். மேலும் இரண்டாவது இன்னிங்ஸ் பந்து வீசுவதற்கு பும்ரா வரவில்லை. இதன் காரணமாக அவரது காயம் எப்படியான அளவிலானது? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய கேள்வி இருந்து வருகிறது.

- Advertisement -

பும்ரா காயம் வெளியான பழைய அறிக்கை

பும்ரா காயம் குறித்து ஆஸ்திரேலியாவில் அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கை தெரிவித்தது. மேலும் அந்த அறிக்கையில் ஏற்கனவே அவருக்கு முதுகு பகுதியில் காயம் இருந்த காரணத்தினால், அவருக்கு ஓய்வு கொடுப்பது நல்லது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே அவர் அடுத்து பந்து வீச வரவில்லை.

இதைத்தொடர்ந்து இந்தியா திரும்பி விட்ட பும்ராவுக்கு என்ன மாதிரியான காயம் ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்து இன்னும் பிசிசிஐ தெளிவுபடுத்தவில்லை . மேலும் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடர்கள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி இரண்டிலும் பங்கேற்பாரா? என்கின்ற சந்தேகம் பெரிய அளவில் எடுத்து வருகிறது.

- Advertisement -

காயத்தின் கிரேடு அளவுகளுக்கான ஓய்வு

பும்ராவுக்கு தற்போது காயம் எந்த கிரேடில் இருக்கிறது என்று உறுதியாகவில்லை என்று செய்திகள் கூறுகிறது. கிரேடு 1 அளவில் காயம் இருந்தால் இரண்டு மூன்று வாரங்கள் திரும்பி வர தேவைப்படும். இதுவே கிரேடு 2 என்றால் 6 முதல் 8 வாரங்கள் தேவைப்படும். கிரேடு 3 என்றால் இரண்டு முதல் ஆறு மாதங்கள் கூட ஆகலாம். எனவே தற்போது இதை கண்டறிவதற்கு சிறிய கால அவகாசம் தேவைப்படுகிறது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : விராட்டை புரிஞ்சுக்க முடியல.. இந்திய அணி தோல்விக்கு மிக முக்கிய காரணம் இதுதான் – சவுரவ் கங்குலி பேச்சு

மேலும் பும்ராவுக்கு காயம் எந்த அளவில் இருந்தாலும் அவருக்கு இங்கிலாந்து வெள்ளைப் பந்து தொடர்களில் இருந்து ஓய்வு கொடுக்கப்படும் என்றும், ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராக, இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பும்ரா திரும்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -