ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் படுதோல்விக்கான காரணம் குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மிகவும் வெளிப்படையான முறையில் பேசி இருக்கிறார்.
இந்த முறை ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை பும்ரா தலைமையில் வென்ற பொழுதும் கூட, அதற்கு அடுத்து தொடர்ந்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் முக்கிய காரணமாக இருந்தார்கள்.
மீண்டு வந்த இந்திய பந்துவீச்சு
இந்த தொடரின் ஆரம்பத்தில் பும்ராவுக்கு பெரிய அளவில் பந்துவீச்சில் ஆதரவு மற்றவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. ஆனால் இந்த தொடரின் முடிவில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்களில் மூன்றாவது இடத்தில் முகமது சிராஜ் இடம்பெற்றார். கடைசி டெஸ்டில் விளையாட வாய்ப்பு பெற்ற பிரசித் கிருஷ்ணா சிறப்பான முறையில் அந்த வீசியிருந்தார்.
இந்திய பந்துவீச்சு யூனிட் சரியான நிலையில், இந்திய பேட்டிங் யூனிட்டில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல்ராகுல், மேலும் லோயர் ஆர்டரில் நிதீஷ் குமார் ரெட்டி தவிர வேறு யாரும் 200 ரன் கடந்து எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே இந்திய அணி தோல்வி அடைவதற்கு மிகவும் முக்கியமான காரணமாக இருந்தது.
இப்படி செய்தால் வெல்ல முடியாது
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவிக்கும் பொழுது “இந்திய அணி நன்றாக பேட்டிங் செய்யவில்லை. நீங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயம் வெற்றி பெறவே முடியாது. நீங்கள் வெற்றி பெறுவதற்கு நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். நீங்கள் 170, 180 ரன்கள் எடுத்தால் ஜெயிக்க முடியாது. 350 முதல் 400 ரன்கள் எடுக்க வேண்டும்”
இதையும் படிங்க : தோல்விக்கு காரணம் தமிழக வாஷிங்டன் சுந்தர்தான்.. கடந்த 2 முறையும் இவர் மாதிரி இல்ல – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்
“இந்த தொடரில் இந்திய அணி தோல்வியை அடைந்திருப்பதற்கு தனிப்பட்ட முறையில் யாரையுமே இங்கு காரணம் கூற முடியாது. இந்த தோல்வியில் அனைவரின் பங்குமே இருக்கிறது. மேலும் விராட் கோலி தொடர்ந்து ஒரே முறையில் ஆட்டம் இழப்பது குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதே சமயத்தில் அவர் நிச்சயம் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வந்து விடுவார் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.






