அடுத்த மாதம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி துவங்க இருக்கும் ஆசியக் கோப்பை டி20 தொடர் குறித்து பும்ரா மற்றும் கேப்டன் சூரியகுமார் யாதவ் பற்றி வெளியாகி இருக்கும் தகவல்கள் இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
நீண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய அணி பெரிய ஓய்வில் இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து டி20 கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. நடப்பு டி20 சாம்பியன் மற்றும் ஆசிய சாம்பியனாக இருப்பதால் இந்திய அணி இந்த தொடரை வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
பும்ரா சூர்யா வெளியிட்ட தகவல்
ஆசியக் கோப்பை தொடருக்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்திய மண்ணில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் பும்ரா விளையாடுவாரா என்கின்ற சந்தேகம் இருந்தது. தற்போது ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்க தயாராக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பும்ரா தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்திய டி20 கேப்டன் சூரியகுமார் யாதவ் உடல் தகுதிக்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவரும் உடல் தகுதியை பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இருவரும் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு விளையாட இருக்கிறார்கள்.
கில் பிரச்சனை முடிந்தது
சூரியகுமார் யாதவ் விளையாட விட்டால் கேப்டனாகில் நியமிக்கப்படுவார் என்று உறுதியான செய்திகள் வெளியாகி வந்தன. அவர் துவக்க ஆட்டக்காரர் என்பதாலும் மேலும் டி20 வடிவத்திற்கு அவர் பெரிய அளவில் சரியாக இருக்க மாட்டார் எனவும் பேசப்பட்டது. தற்போது சூரியகுமார் யாதவ் உடல் தகுதி பெற்றுவிட்ட காரணத்தினால்கில்லை இந்திய டி20 அணியில் தேர்வு செய்ய மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : விராட் ரோஹித் இல்லாத டீம்.. நாங்க இருக்க விரும்பிய இடம் இதுதான்.. அருமையா இருந்தது – வாஷிங்டன் சுந்தர் பேட்டி
மேலும் இரண்டு முக்கிய வீரர்கள் அனைத்து திரும்புவதும் அத்துடன் கில் டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார் என்பது இந்திய ரசிகர்களை பெரிய அளவில் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஏற்கனவே தொடர்ந்த இந்திய டி20 அணி தொடர்வதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உருவாகியிருக்கிறது.






