விராட் ரோஹித் இல்லாத டீம்.. நாங்க இருக்க விரும்பிய இடம் இதுதான்.. அருமையா இருந்தது – வாஷிங்டன் சுந்தர் பேட்டி

0
115
Sundar

இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாத இந்திய இளம் டெஸ்ட் அணியின் சூழல் அற்புதமாக இருந்ததாக வாசிக்கிறேன் சுந்தர் தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு பெரிய வீரர்கள் இல்லாமல் விளையாடிய இந்திய அணி தொடரை இரண்டுக்கு இரண்டு என சமன் செய்து அசத்தியது. இதற்கு அணியின் அனைத்து வீரர்களுமே சிறப்பாக செயல்பட்டு இருந்தார்கள்.

- Advertisement -

மிகவும் சிறந்த இடம்

இந்த தொடரில் நான்காவது போட்டி டிரா ஆகவும், ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் தேவையான டார்கெட்டை வைத்து வெல்லவும் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் மிக முக்கிய காரணமாக இருந்தது. இந்த நிலையில் பெரிய வீரர்கள் இல்லாத அணியின் சூழல் எவ்வாறு இருந்தது என அவர் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து வாஷிங்டன் சுந்தர் கூறும் பொழுது ” உண்மையிலேயே டிரெஸ்ஸிங் ரூம் சூழ்நிலையும் அது உருவாக்கப்பட்ட விதமும் மிகவும் அற்புதமாக இருந்தது. அது அனைவரும் இருப்பதற்கான அருமையான சூழ்நிலையை கொண்டு இருந்தது. ஏனென்றால் அணியில் இருந்த நாங்கள் அனைவருமே இளமையானவர்களாக இருந்தோம்”

- Advertisement -

நினைத்ததை செய்தோம்

“தொடருக்கு வரும்போது அணியில் விளையாடும் அனைவரும் முக்கியமான சூழ்நிலைகளில் கைகளை உயர்த்தி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்து இருந்தோம். அதேபோல் தொடர் முழுக்க தேவைப்படும் பொழுது ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார்கள்”

இதையும் படிங்க : பும்ரா இனி முன்னணி வீரர் அல்ல.. இந்திய கிரிக்கெட் அவருக்காக இனி இதை செய்யக்கூடாது – சஞ்சய் மஞ்சுரேக்கர் பேட்டி

“இந்த தொடர் முழுக்க ஏராளமான வீரர்கள் முக்கியமான சூழ்நிலையில் முன்னேறி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்கள். நாங்கள் எப்போதும் இருக்க விரும்பிய அணி இதுதான். இந்த அணியில் நாங்கள் இடம்பெற்றோம். களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சில அருமையான பிணைப்புகளை ஏற்படுத்தி இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -