இந்தியாவுக்கு எப்பவும் ஆதரவாதான் இருப்பேன்.. அந்த மக்கள் எப்பவும் முதுகில் குத்தல – கெவின் பீட்டர்சன் பேட்டி

0
20
Pieterson

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தான் எப்பொழுதும் இந்தியாவுக்கு ஆதரவாகவே இருந்து வருவது ஏன் என்பது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இங்கிலாந்து வீரர்கள் பொதுவாக இந்திய கிரிக்கெட்டுக்கு எதிர் மனநிலையை கொண்டவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு முறை இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்யும் பொழுதும் ஏதாவது ஒரு குறையை சொல்லிவிட்டுதான் செல்வார்கள்.

- Advertisement -

இங்கிலாந்து கலாச்சாரத்தில் வித்தியாசமானவர்

இந்த இங்கிலாந்து கலாச்சாரத்தில் கெவின் பீட்டர்சன் எப்பொழுதும் வித்தியாசமானவராக இருந்து வந்திருக்கிறார். அவர் எப்பொழுதும் இந்தியாவுக்கு ஆதரவான கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்திருக்கிறார். இந்தியாவை தான் அதிகம் விரும்புவதாகவும் சில நேரங்களில் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் இங்கிலாந்து அணி கடைசியாக ஒரு டெஸ்ட் தொடரை வென்ற பொழுது அதற்கு முக்கிய காரணங்களில் ஒருவராக கெவின் பீட்டர்சன் இருந்தார். இந்திய அணிக்கு எதிராக வாய்ப்பு கிடைக்கும் பொழுது சிறப்பாக விளையாடி இருந்தாலும் கூட, அவருக்கு இந்தியாவில் எந்த எதிர்ப்பும் கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

யாரும் முதுகில் குத்தவில்லை

இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறும் பொழுது “நான் ஏன் இந்தியாவுக்கு இவ்வளவு ஆதரவாக இருக்கிறேன் என மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் நான் டஜன் கணக்கில் இந்தியாவிற்கு சென்ற பொழுதில், அங்கு ஒரு முறை கூட அவமரியாதை, முதுகில் குத்துதல், அவதூறு அல்லது மோசமான சக்தியை நான் சந்தித்ததில்லை. ஒவ்வொரு முறையும் அன்பு, கருணை, மரியாதை, அரவணைப்பு மட்டுமே கிடைத்திருக்கிறது”

இதையும் படிங்க : இந்தியா நியாயமா நடக்கணும்.. நாங்க எல்லாம் முன்ன மாதிரி இல்ல.. புரிஞ்சுக்கோங்க – ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி

“நான் இந்தியாவில் வாழ்நாள் முழுவதும் நல்ல நட்புகளை உருவாக்கி இருக்கிறேன். குடும்பமாக என்னுடைய நண்பர்கள் மாறிவிட்டார்கள். இதை நான் மிகவும் பொக்கிஷமாக கருதுகிறேன். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்கள் என்னுடைய சகோதரர்களாக இருப்பார்கள். மரியாதை என்பது கொடுத்துப் பெறுவது என்று நான் அறிவேன். அதை நான் அவர்களுக்கு எதிராக விளையாடியும், ஐபிஎல் தொடரில் பணியாற்றிய செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்” என மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -