அடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கம்பீர் சில பரிசோதனை முயற்சிகள் செய்யலாம் என செய்திகள் தெரிகிறது.
இந்திய அணி சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது.
அகர்கர் கம்பீரின் திட்டம்
இந்திய தேர்வு குழு தலைவர் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் இருவரும் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களின் புள்ளி விவரங்களை தாண்டி அவர்களின் திறமையை மட்டும் பார்த்து வாய்ப்புகளை தந்து, மூன்று வடிவத்திலும் வலிமையான இந்திய அணியை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை வைத்திருக்கிறார்கள்.
இந்த அடிப்படையில் சாய் சுதர்ஷன் உள்நாட்டு சிவப்பு பந்து கிரிக்கெட்டில் ஆவரேஜ் குறைவாக இருந்த பொழுதும் கூட, அவர் சர்வதேச வீரராக சிறப்பான முறையில் உருவாவதற்கு திறமை உள்ளவராக கணிக்கப்பட்டு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளில் இன்னும் அவர் தன் திறமையை நிரூபிக்கவில்லை.
திடீர் மாற்றம்
இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக இருக்கும் துருவ் ஜூரல் இந்தியா மற்றும் இந்திய ஏ அணிக்கு என இரண்டு வாய்ப்புகளிலும் மூன்று சதங்கள் அடித்து தன்னை நிரூபித்திருக்கிறார்.
இதையும் படிங்க : தோனி இதில் நட்பை பார்க்க மாட்டார்.. ஜடேஜாவை கைவிடுவதற்கான முக்கிய காரணம் இதுதான் – முகமது கைப் பேச்சு
இதன் காரணமாக மூன்றாவது இடத்தில் சாய் சுதர்சனுக்கு பதிலாக துருவ் ஜுரலை களம் இறக்க இந்தியத் தேர்வுக்குழு பயிற்சியாளர் கம்பீருக்கு அறிவுறுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. சாய் சுதர்ஷன் சரியாக விளையாடாவிட்டால் உடனடியாக அவரது இடம் பறிக்கப்படும் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.






