தற்போது சிஎஸ்கே அணியின் நலனுக்காக ஜடேஜாவை தோனி தியாகம் செய்ய தயாராகிவிட்டார் என்று இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்திருக்கிறார்.
சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமிருந்து சஞ்சு சாம்சனை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ரவீந்திர ஜடேஜாவை கொடுப்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதே சமயத்தில் இது 100% ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது.
முடிந்த சிஎஸ்கே கலாச்சாரம்
ஜடேஜா சிஎஸ்கே அணி உடன் இணைந்து மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். மேலும் கடைசி முறை சாம்பியன் பட்டம் வெல்வதற்கு ஜடேஜாவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. தோனி சுரேஷ் ரெய்னாவுக்கு பிறகு சிஎஸ்கே அணியின் முக்கிய முகமாக ரவீந்திர ஜடேஜா இருக்கிறார்.
இந்த நிலையில் சாம்பியன் அணியான சிஎஸ்கே எப்பொழுதும் தங்கள் அணியில் இருந்து இன்னொரு அணிக்கு வீரரை கொடுக்காது, ஆனால் மொத்த தொகையை மட்டும் கொடுத்து வேறு அணியில் இருந்து ஒரு வீரரை டிரேடிங் செய்யும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் இந்த கலாச்சாரம் ரவீந்திர ஜடேஜாவை கொடுப்பதன் மூலம் முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது.
ஜடேஜாவை விட காரணம் என்ன?
தற்போது தோனி ஜடேஜாவை கைவிடுவதற்கான முக்கிய காரணம் அணியின் நலன் தான் என்று முகமது கைப் தெரிவித்திருக்கிறார். தோனி நட்புக்கு மரியாதை கொடுக்கக் கூடியவர் என்றாலும் கூட அவருக்கு அதைவிட அணியின் நலன் மிக முக்கியமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க : உடையாத ஒன்றை ஏன் சரிசெய்யனும்.. ஆர்சிபி அணி யாரை விடுவிக்கனும்.. முன்னாள் வீரர் கருத்து
இதுகுறித்து முகமது கைப் பேசும் பொழுது ” அணியின் நலனுக்காக ஜடேஜாவை தியாகம் செய்ய வேண்டியது இருந்தால் நிச்சயமாக தோனி அதை செய்வார். அவர் நட்பை பாராட்ட கூடியவர் என்பது உண்மைதான். ஆனால் அவருக்கு அதைவிட சிஎஸ்கே அணியை சாம்பியன் ஆக்க வேண்டியது முக்கியம். தோனி நட்புக்காக வெற்றியை விட்டுக் கொடுக்கக் கூடியவர் என்று மக்கள் நினைத்தால் அப்படி கிடையாது. ஜடேஜாவை விட்டுக் கொடுத்தால் ஒரு நல்ல அணி அமையும் என்றால், தோனி அதை செய்வார்” என கூறியிருக்கிறார்.






