இங்கிலாந்தில் அசத்த காரணம் கம்பீர்தான்.. பிடிவாதத்தை விட்டு இந்த திட்டத்தை மாற்றினார் – வெளியான புதிய அறிக்கை

0
108
Gambhir

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதற்கு முக்கிய காரணமாக கம்பீர் இருந்திருக்கிறார் எனவும், அவர் தனது பிடிவாதத்தை கைவிட்டு அணுகுமுறையை மாற்றிக் கொண்டார் என செய்திகள் தெரிவிக்கிறது.

இந்த முறை இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் மிடில் வரிசையில் கேப்டன் கில், ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா என மொத்தம் ஐந்து பேட்ஸ்மேன்கள் அபாரமான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்கள். இதற்குப் பின்னணியில் கம்பீர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோடக் இருக்கிறார்கள் என்று செய்திகள் கூறுகிறது.

- Advertisement -

கம்பீரின் பழைய அணுகுமுறை

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் எப்பொழுதும் அதிரடியான பேட்டிங் அணுகுமுறையை வீரர்கள் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு பெரிய அளவில் அடி விழுந்தது. இதைத் தொடர்ந்து அவருடைய டெஸ்ட் பயிற்சியாளர் பொறுப்புக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

கம்பீர் இந்திய பேட்ஸ்மேன்கள் தனிப்பட்ட சாதனைகளை நோக்காமல் எப்பொழுதும் தாக்கி விளையாடுவதற்கான நோக்கத்தை கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பினார். இது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நல்ல தாக்கத்தை கொடுத்தது. ஆனால் சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் சரி வரவில்லை.

- Advertisement -

பழைய பள்ளிக்கு திரும்புதல்

இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கம்பீர் தனது பேட்ஸ்மேன்களை களத்தில் எந்த அளவுக்கு நேரம் செலவிட முடியுமோ அந்த அளவுக்கு செலவிடும்படியும், பொறுமையாக ரன்கள் கிடைக்கும் வழியில் இருந்து எடுத்துக் கொண்டு வரும்படியும் தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டிருக்கிறார். இது டெஸ்ட் கிரிக்கெட் பழைய பள்ளி வழிமுறை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சாம்சன் ஒருத்தருக்காக.. ராஜஸ்தான் சிஎஸ்கே கிட்ட இந்த 3 வீரர்களை கேக்குது.. கொஞ்சம் ஓவரா? – ராபின் உத்தப்பா பேச்சு

கம்பீர் பழைய முறைக்கு திரும்பியதால் அது சிறந்த முறையில் இந்திய அணிக்கு பலன் கொடுத்து இருக்கிறது. குறிப்பாக கேப்டன் கில் களத்தில் நிறைய நேரம் செலவு செய்தார். மேலும் ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டக்காரர் என்றாலும் தேவைப்படும் பொழுது பொறுமை காட்ட தயாராக இருந்தார். மொத்த அணியும் கம்பீரின் புதிய அணுகுமுறைக்கு வந்ததும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்தில் அசத்தி விட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது.

- Advertisement -