இந்திய கிரிக்கெட்

முடிவுக்கு வந்த பிரச்சனை..பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்றதா பாக்?. சாம்பியன்ஸ் டிராபி 2025.. முழு விபரம்

பாகிஸ்தானில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் இதில் இந்திய அணி பங்கு பெறுவதில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் நீடித்து வந்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் அதன் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து தற்போது இந்தியா பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளுக்கான இறுதி இடம் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபி 2025

கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி, அடுத்த போட்டித் தொடரை நடைபெறும் வாய்ப்பை பெற்றது. இந்த நிலையில் 2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்த உள்ள நிலையில் அதில் இந்திய அணி பாதுகாப்பு பிரச்சினைகளின் காரணமாக பாகிஸ்தானில் விளையாடுவது சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக 2008ஆம் ஆண்டு முதல் இந்திய அணி பாகிஸ்தான் செல்வதை முற்றிலுமாக தவிர்த்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறியும் இந்திய நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வந்து நிலையில், இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் இடையே தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் நீடித்தது. ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்த பிசிசிஐ இந்திய அணி விளையாடும் போட்டிகளை துபாயில் நடத்துமாறு கோரிக்கை வைத்தது. இந்த நிலையில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இந்திய அணி விளையாடும் போட்டிகளை துபாயில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்டில் நடத்த பாகிஸ்தான் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

முடிவுக்கு வந்துள்ள பிரச்சனை

பிசிபியின் தலைவர் மொசின் நக்வி எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷேக் நஹ்யான் அல் முபாரக் ஆகியோர் இடையேயான சந்திப்பை தொடர்ந்து இஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் வெளிவந்துள்ள அறிக்கையின் படி, பிப்ரவரி 23ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் விளையாடும் போட்டி துபாயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 20ஆம் தேதி இந்திய அணி வங்கதேசத்தையும்,மார்ச் 2ம் தேதி நியூசிலாந்து அணியும் எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க:சயிம் அயூப் அபார சதம்.. டி20 பாணியில் கிளாசன் அதிரடி வீண்.. 3வது ஒருநாள்.. பாகிஸ்தான் சிறப்பான வெற்றி

எனவே இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும் என்று இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அரை இறுதி ஆட்டங்கள் மார்ச் 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெறும் நிலையில் இந்திய அணி நாக் அவுட் சுற்றை அடைந்தால் அந்தப் போட்டிகளும் துபாயில் நடைபெறும் அல்லது இந்திய அணி தகுதி பெறவில்லை என்றால் பாகிஸ்தானின் லாகூரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்திய அணி மார்ச் 9ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அந்தப் போட்டியும் துபாயில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -
Published by

Recent Posts