ரோகித் சர்மா ரஞ்சி ஆடுகிறாரா.. அணிக்குள் என்ன நடக்கிறது? – மும்பை கேப்டன் ரகானே பேட்டி

0
336
Rahane

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மும்பை அணிக்காக இரண்டாம் கட்ட ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடுவாரா? என்பது குறித்து மும்பை அணியின் கேப்டன் ரகானே பதில் அளித்து இருக்கிறார்.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் தேசிய அணிக்கு விளையாடாத பொழுதும் காயம் ஏதும் இல்லாத பொழுதும் உள்நாட்டு கிரிக்கெட்டில் அனைத்து வீரர்களும் விளையாட வேண்டும் என கட்டளையிட்டு இருந்தது. இதன் அடிப்படையில் தற்போது ஓய்வில் இருக்கும் அனைத்து இந்திய வீரர்களும் ரஞ்சி போட்டியில் விளையாட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரோகித் கேரக்டர் தெரியும்

தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி டெல்லி அணிக்காகவும், கேஎல்.ராகுல் கர்நாடக அணிக்காகவும், கில் பஞ்சாப் அணிக்காகவும், ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் மும்பை அணிக்காகவும் விளையாடுவதற்கு 100 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

இது குறித்து மும்பை அணியின் கேப்டன் ரகானே பேசும் பொழுது “பாருங்கள் நமக்கு ரோகித் சர்மா கேரக்டர் எப்படி ஆனது என்பது குறித்து மிக நன்றாகவே தெரியும். அவரை மீண்டும் மும்பை டிரெஸ்ஸிங் ரூமில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் எப்பொழுதும் போல் அமைதியாகவே இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் பொழுது அவருடைய குணம் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறது”

- Advertisement -

ரோகித் சர்மா ரஞ்சியில் விளையாடுவாரா?

“அவர் மிகவும் நிதானமாக இருக்கக்கூடியவர். அவருக்கு அவருடைய ஆட்டம் குறித்து மிக நன்றாகவே தெரியும். எனவே அவர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவருக்கு யாருமே எதுவும் சொல்லத் தேவையில்லை. அவர் உள்ளே நுழைந்தவுடன் மிகவும் நன்றாக செயல்படுவார் என்று நம்புகிறேன். அவர் ஒருபோதும் மாறவில்லை, இது மிகவும் நல்லதாக அமைந்திருக்கிறது”

இதையும் படிங்க : நீங்க ஆர்சிபி ரசிகரா இருந்தா.. இந்த ஓன்ன மறக்காம செய்யுங்க – அஸ்வின் இங்கிலாந்து அணி பற்றி கருத்து

“ரோகித் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக மும்பை அணிக்காக ரஞ்சியில் விளையாட இருக்கிறார். ஆனால் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அடுத்த நான்கு நாட்கள் அவர் எங்களுக்கு கொடுக்கும் உள்ளீடுகள் மிகவும் முக்கியமானவை. அவர் மிகவும் பசியுடன் இருக்கிறார். அவர் கடந்த இரண்டு பயிற்சி அமர்வுகளில் மிகவும் சிறப்பாக விளையாடியிருந்தார். எனவே இதெல்லாம் கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு பகுதிதான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -