சாம்பியன்ஸ் டிராபி தொடர்.. சீனியர் வீரர்களின் நிலை என்ன.? பும்ராவின் காயம்.. முக்கிய முடிவை எடுக்க உள்ள பிசிசிஐ

0
533

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கு பெற உள்ளது.

இறுதி அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் அதில் பிசிசிஐ பங்கு பெற்று சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்

தற்போது நடைபெற்று முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை பரிதாபமாக இழந்தது. மேலும் அடுத்து நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தகுதி பெறுவதற்கான வாய்ப்பையும் இந்திய அணி இழந்திருக்கிறது. இதில் சீனியர் வீரர்களின்மோசமான செயல்பாடு இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் அடுத்த மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், இதன் இறுதி அணியை நாளை பிசிசிஐ தேர்வு செய்யவுள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் மிக மோசமாக செயல்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று தகவல் வெளியாகியது. ஆனால் தற்போது ரோஹித் சர்மாவே கேப்டனாக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்திய அணிக்கு பெரிய தலைவலி

மேலும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரிஷப் பண்ட் இந்திய பேட்டிங் வரிசையில் முக்கிய தேர்வாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் நட்சத்திர வீரராக கருதப்படும் பும்ரா காயம் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத நிலையில் அவரது உடல்நிலை குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. இந்த நிலையில்அவரது காயம் இந்திய அணிக்கு தலைவலியாக அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க:நட்சத்திர கலாச்சாரம் முடிவுக்கு வரணும்.. பிசிசிஐ முதல்ல இதை நிறுத்துனாதான் நல்ல பிளேயர்ஸ் வருவாங்க – கவாஸ்கர் விமர்சனம்

மேலும் டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட வலது கை பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் இந்திய அணியில் இடம் பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சமீபத்திய டெஸ்ட் தொடரில் மோசமாக செயல்பட்ட விராட் கோலிக்கு அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் இருப்பதால் அதில் அவர் சிறப்பாக விளையாடிய தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். எனவே சீனியர் வீரர்களை பிசிசிஐ இந்த முறை உன்னிப்பாக கவனிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -